ரேஷன் கார்டில் குழந்தைகளின் பெயர்களை நீக்கக் கூடாது.. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு…

100
Advertisement

ஆதார் அட்டை இல்லாத குழந்தைகளின் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்படக் கூடாது என அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கார்டு மூலம் அந்தந்த மாநில அரசுகளின் கொள்கையின்படி அவரவர் கார்டுகளின் தகுதிக்கேற்ப இலவசமாகவும் குறைந்த விலையிலும் உணவு பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த ரேஷன் கார்டுகளுக்கு என்னென்ன பொருட்களை வழங்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பது குடும்பத் தலைவரின் ஆண்டு வருமானம் ஆகும். மேலும் இந்த ரேஷன் கார்டுகளில் அரசு உதவித் தொகையும் கிடைக்கும்.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால் இலவச கலர் டிவி, இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் திட்டம், நிவாரணம், நகைக் கடன் ரத்து, மாதம் ரூ. 1000 திட்டம், பொங்கல் பரிசு உள்ளிட்டவை ரேஷன் கார்டை அடிப்படையாக கொண்டே வழங்கப்படுகின்றன. மேலும் ரேஷன் கார்டில் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப பொருட்கள் விநியோகத்தில் கூடவோ குறைவாகவோ இருக்கும்.

அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்காகவே சிலர் பல்வேறு முகவரிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுகளை வைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போலி ரேஷன் கார்டுகளை நீக்கும் பணிகளை அரசு ஒரு புறம் செய்து வருகிறது. அது போல் நகைக் கடன் தள்ளுபடி கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு பலர் நகைகளை அடகு வைத்துள்ளனர்.