டெல்லியில் குடியரசு தலைவரை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்..!

150
Advertisement

தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஏப்ரல் 27, வியாழக்கிழமை) இரவு டெல்லி செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது டெல்லி பயணத்தை ரத்து செய்தார்.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 28, வெள்ளிக்கிழமை) காலை டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று காலை டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி விமான நிலையத்தில் திமுக மூத்த தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற திமுக எம்.பிக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு நேராக தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு சென்ற முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பாதுகாப்பு படையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இன்று காலை 11.30 மணி அளவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து, கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு அழைப்பிதழை வழங்கினார். மேலும் நீட் உட்பட சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு விரைந்து ஆளுநர் ஒப்புதல் கால நிர்ணயம் செய்வது தொடர்பாகவும் குடியரசுத் தலைவரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.