முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு அதிர்த்த அதிகாரிகள்

50

சென்னையில் எப்படிப்பட்ட மழை பெய்தாலும், அதனை சமாளிக்கும் வகையில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளா. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால், மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் எந்த அளவுக்கு நடைபெற்றுள்ளது என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

பிராட்வே, NSC போஸ் சாலை, வால்டாக்ஸ் ரோடு, பேசின்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு பணிகளை மேலும் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், சென்னையில் வெள்ளத்தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்றும்,15 நாட்கள் முதல் 30 நாட்களுக்குள் வெள்ளத்தடுப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் எனவும் தெரிவித்தார்.

பெருமழையை எதிர்கொள்ளும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அவ்வப்போது மழை பெய்வதால் மழைநீர் வடிகால் பணிகளில் தடை ஏற்படுவதாகவும் அவர் கூறினார். சென்னையில் வெள்ளத்தடுப்பு பணிகள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisement