தமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டம்-ஒழுங்குதான் முக்கிய காரணம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்….

27
Advertisement

2 நாள் பயணமாக விழுப்புரம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து  விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. மற்றும் 3 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் முதலமைச்சர் வழங்கினார். தமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டம்-ஒழுங்குதான் முக்கிய காரணம் என்று கூறிய முதலமைச்சர், அமைதியான மாநிலத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியில் தொய்வு இருக்காது என்று தெரிவித்தார்.