துபாய் தீ விபத்தில் சிக்கிய தமிழர்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு….! 

32
Advertisement

சென்னை : துபாய் Deira Burj Murar பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த 2 தமிழர் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

துபாய் Deira Burj Murar அல் ராஸ் பகுதியில் பல மாடி குடியிருப்பு கட்டிடம் அமைந்துள்ளது. இங்கு இந்தியர்கள் கணிசமாக வசித்து வந்தனர். இக்குடியிருப்பின் 4-வது மாடியில் இயங்கி வந்த சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சனிக்கிழமையன்று திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பரவி அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பரவியது.

இந்த தீ விபத்தில் சிக்கி தற்போது வரை மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த இமாம் காசிம், முகம்மது ரஃபீக் ஆகியோர் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்…