காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த ரோந்து வாகனங்கள் தொடக்கம்

36

2021-22ஆம் ஆண்டுக்கான காவல்துறை மானிய கோரிக்கையில் நவீன கட்டுப்பாட்டு அறையின் சேவையை பலப்படுத்தும் விதமாக பழுதடைந்த மற்றும் பழைய ரோந்து வாகனங்களுக்கு மாற்றாக புதிய ரோந்து வாகனங்கள் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சென்னை தலைமைச்செயலகத்தில், போலீசாரின் பயன்பாட்டிற்கு புதிதாக வாங்கப்பட்ட ரோந்து வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவங்கி வைத்தார். 

போக்குவரத்து சீர் செய்யும் வகையில் 14.71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 93 போக்குவரத்து காவல் ரோந்து வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Advertisement