சிக்கன் மட்டன் ஏன் முட்டையை கூட தொட்டுப் பார்க்காத பிரபல தமிழ் நடிகர்கள்…!

134
Advertisement

உணவு என்பது தனிநபரின் விருப்பம் சார்ந்த விஷயமாகும் சிலர் அசைவ மற்றும் சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள், ஆனால் அசைவ உணவுகளைத் தொட்டு கூட பார்க்காத தமிழ் நடிகர்களைத் தெரிந்துக் கொள்வோம்.


தமிழ் சினிமாவில் மிகவும் பிட்டாக இருக்கும் நடிகர்களில் சூர்யாவும் ஒருவர், இவர் மிகவும் கட்டுக்கோப்பான உடலைக் கொண்டுள்ளதால், தினமும் இவர் அசைவ உணவுகளை சாப்பிடுவார் என்று நினைப்போம் ஆனால் இவர் தீவிர சைவ உணவு உண்பவர். சூர்யா, சிக்கன், மட்டன் மட்டுமல்ல முட்டையும் சாப்பிடுவதில்லையாம், சூர்யாவுக்குத் தயிர் சாதம் சாப்பிட மிகவும் பிடிக்கும் என்று சொல்லப்படுகிறது.


இறுதி சுற்றுப் படத்தில் மிகவும் சிறப்பான உடலைக் கொண்டு இருந்தார் மாதவன், ஆனால் சிறுவயதிலிருந்தே மாதவன் சைவ உணவுகளை மட்டும் தான் உண்பார். வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் காய்கறிகள் கூட அவரது தோட்டத்தில் வளர்க்கப்படுகிறதாம்.


தமன்னா பாட்டியா பாகுபலி மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். முன்பு அவருக்குப் பிடித்த உணவு சிக்கன் பிரியாணியாம். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு அசைவத்தை விட்டுவிட்டு, சைவத்தைப் பின்பற்றுவதாக சொல்லப்படுகிறது.
பல தமிழ் படங்களில் நடித்துள்ள ஷ்ரேயா சரண் மிகச் சிறந்த சைவ உணவு பிரியராம். அவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை பிறந்திருந்தாலும், இவர் இன்னும் கட்டுக்கோப்பான உடலைப் பராமரிக்கிறார். எனவே டயட்டையும் கடைப்பிடிக்கும் ஷ்ரேயா அசைவத்தைத் தொடுவதில்லையாம்.


தமிழ் சினிமாவில் மிக உச்ச நடிகையாக இருக்கும் த்ரிஷா ஒரு சைவ விரும்பியாம். அவருக்கு மிகவும் பிடித்த உணவு தோசையும் சாம்பாரும் என்று சொல்லப்படுகிறது. மேலும் நடிகை ஏமி ஜாக்சன், ஜெனிலியா ஆகியோரும் சைவ பிரியர்கள் என்று சொல்லப்படுகிறது.