சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் 393 கோடிரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள பேருந்துநிலையம் செப்டம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் புதிய பேருந்துநிலையம் அமைக்கும் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.
இந்த பணிகளை, அமைச்சர்கள் முத்துசாமி, தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளி்த்த அமைச்சர் முத்துசாமி, வரும் செப்டம்பர் மாதத்திற்குள் கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறினார்.