ரயில் விபத்து – ஓட்டுநர் பணியிடை நீக்கம்

353

கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்ட மின்சார ரயில், கடற்கரை ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் ஏறி அங்குள்ள கடைகளில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த மின்சார ரெயிலை பவித்ரன் என்ற லோகோ பைலட் ஓட்டி வந்த போது இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக பவித்ரன் மீது சென்னை எழும்பூர் ரெயில்வே காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும் ரயில்வே அதிகாரிகள் 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு விபத்து தொடர்பான விவரங்களையும் விபத்துக்கான காரணங்களையும் விசாரித்தனர்.

இந்த நிலையில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி லோகோ பைலட் பவித்ரன் ரெயில்வே நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விபத்து குறித்த முழுமையான அறிக்கை கிடைத்தவுடன் போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகளின் அடிப்படையில் அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.