காணாமல் போன ஓட்டுநர் உடல் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

251

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த கால்டாக்ஸி ஓட்டுநர் ரவி என்பவர், கடந்தவாரம் காணமால் போனதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஓட்டுநர் ரவிக்கும் அண்டை வீட்டில் இருந்த தலைமைக்காவலருக்கும் பிரச்சனை இருந்தது தெரியவந்தது.

ரவி காணாமல் போன நிலையில் தலைமைக்காவலரும் வீட்டிற்கு வரவில்லை என கூறப்பட்டது.

இந்நிலையில், செங்கல்பட்டு அருகே ஒருவரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அந்த உடல் ஓட்டுநர் ரவியின் உடலா என்பதை கண்டுபிடிக்க டி.என்.ஏ. பரிசோதனையும் நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் 70 சதவிகிதம் வரை ஓட்டுநர் ரவியின் டி.என்.ஏ.-யுடன் ஒத்துப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதையடுத்து, ஓட்டுநர் கொலை சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.