சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட 46 லட்சம் ரூபாய்

120

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட 46 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை  சென்டிரல் ரயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, விஜயவாடாவில் இருந்து சென்டிரல் ரயில் நிலையம் வந்த பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து சந்தேகப்படும்படியாக இறங்கி வந்த ஒருவரை மடக்கி பிடித்து போலீசார் சோதனை நடத்தினர்.

அவர் வைத்திருந்த 2 பைகளில் உரிய ஆவணங்கள் இன்றி 46 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.

Advertisement

அந்த நபர் வேலூர் மாவட்டத்தைச்சேர்ந்த ரவி என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 46 லட்சம் ரூபாயும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.