14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

100

இந்நிலையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதகாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வளிமண்டல சுழற்சி தொடர்ந்து நீடிப்பதால் வரும் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.