14 வகை பயிர்களின் கொள்முதல் விலை உயர்வு

267

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய தகவல் ஒளிபரப்புதுறை அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்தார்.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன், நெல், சோளம், பருப்பு, பருத்தி உள்ளிட்ட 14 வகை பயிர்களின் கொள்முதல் விலை உயர்த்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை 100 ரூபாய் உயர்த்தி 2 ஆயிரத்து 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

கேழ்வரகு விலை குவிண்டாலுக்கு 3 ஆயிரத்து 578 ரூபாயாகவும், சோளத்தின் விலை குவிண்டாலுக்கு ஆயிரத்து 962 ரூபாயாகவும், பயத்தம் பருப்பின் விலை குவிண்டாலுக்கு 7 ஆயிரத்து 755 ரூபாயாகவும், உளுத்தம் பருப்பின் விலை குவிண்டாலுக்கு 6 ஆயிரத்து 600 ரூபாயாகவும், நிலக்கடலையின் விலை குவிண்டாலுக்கு 5 ஆயிரத்து 850 ரூபாயாகவும், சூரியகாந்தி விதையின் விலை குவிண்டாலுக்கு 6 ஆயிரத்து 400 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.