விஞ்ஞானிகளுக்கு புதிய விருதை வழங்க மத்திய அரசு திட்டம்

73

விஞ்ஞானிகளுக்கு நோபல் போன்ற விஞ்ஞான் ரத்னா என்ற புதிய விருதை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒட்டுமொத்த விருதுகளையும் மாற்றி அமைக்குமாறு சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மத்திய உள்துறை செயலாளார் அஜய் பல்லா, சுகாதாரத்துறை சார்பில் ஆண்டுதோறும் 51 நபர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது எண்ணிக்கையை குறைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

அதிக மதிப்பு கொண்ட புதிய விருது ஒன்றை உருவாக்குமாறு கூறிய அஜய் பல்லா, தகுதி வாய்ந்த விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு போன்று, விஞ்ஞான் ரத்னா என்ற புதிய விருதை உருவாக்குமாறும், இது தொடர்பாக மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசருடன் ஆலோசனை நடத்துமாறும் கேட்டுக்கொண்டார். 37 விருதுகளை ரத்து செய்யுமாறு சுகாதார ஆராய்ச்சி துறையை அஜய் பல்லா கேட்டுக்கொண்டார்.

தற்போதை விருதுகளை ரத்து செய்துவிட்டு, அதிக அந்தஸ்து கொண்ட புதிய விருதுகளை உருவாக்குமாறு புவியியல் அமைச்சகம், விண்வெளி துறை, அணுசக்தி துறை ஆகியவற்றுக்கு அஜய் பல்லா யோசனை தெரிவித்தார்.

Advertisement