பிரபல நடிகை திடீர் சபதம்…
அதிர்ந்துபோன ரசிகர்கள்

608
Advertisement

https://www.instagram.com/reel/CauN1HHrXPJ/?utm_source=ig_web_copy_link

”இனிமேல் கார் ஓட்டமாட்டேன்” என்று நடிகை யாஷிகா
ஆனந்த் அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் விவாதமாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் அநேகம்பேருக்கு
மிகச்சிறந்த நண்பனாக, தோழியாக, உறவுப் பாலமாக
அமைந்தது சமூக ஊடகமே. அதனை சரியாக சினிமாக்
கலைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisement

நடிகை யாஷிகா ஆனந்தும் இன்ஸ்டாகிராம் மூலம்
தனது ரசிகர்களோடு உறவாடி வருகிறார். இன்ஸ்டாகிராம்
லைவ் வீடியோ மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு
அவ்வப்போது பதில் அளித்துவருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப்
பதிலளித்த யாஷிகா ஆனந்திடம் ஒரு ரசிகர், ”உங்களுடைய
புல்லட் பைக் எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

அதற்கு அவர், ”என் வீட்டில்தான் இருக்கிறது. அதை
என் அண்ணன் பயன்படுத்தி வருகிறார். நான் கார்
ஓட்டி விபத்து ஏற்பட்டதில் என் தோழி இறந்துவிட்டார்.
அதனால், இனிமேல் நான் காரோ பைக்கோ ஓட்டமாட்டேன்”
என்று கூறியுள்ளார்.

அதைக்கேட்ட ரசிகர்கள் ஒருபுறமும் மகிழ்ச்சியும்
மறுபுறம் கவலையும் அடைந்துள்ளனர்.

எப்படியோ தங்கள் மனதுக்கினிய நட்சத்திரங்களோடு
வலைத்தளங்கள்மூலம் உரையாடி நல்லவற்றைப் பின்பற்றினால்
நல்லதுதான்.