முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

279

மகாராஷ்டிரா அமைச்சரவையில் அனில் தேஷ்முக், அமைச்சராக இருந்த போது, மும்பையில் உள்ள ஓட்டல்கள், மதுபான விடுதிகளில் இருந்து, மாதம் 100 கோடி ரூபாய் வரை மிரட்டி பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ, அனில் தேஷ்முக் உள்ளிட்ட சிலரை கைது செய்தது.

இதில் கைது செய்யப்பட்டு, பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் சச்சின் வாஸே அப்ரூவராக மாறியதால், அவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு எதிராக  சி.பி.ஐ. 59 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.