புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்த, காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு ரிலையன்ஸ் காப்பீடு வழக்கில் சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது….

56
Advertisement

சத்யபால் மாலிக் கடந்த 2018 ஆகஸ்ட் முதல் 2019 அக்டோபர் வரை காஷ்மீர் ஆளுநராக இருந்தார்.

இவர் ஆளுநராக இருந்தபோது நீர்மின் திட்டம் மற்றும் அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டங்களை குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்க லஞ்சம் தர சில நிறுவனங்கள் முன்வந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து அவரிடம் சி.பி.ஐ. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாரணை நடத்தியது.

இந்நிலையில் இதுதொடர்பாக காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது. ரிலையன்ஸ் காப்பீடு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக, சி.பி.ஐ உத்தரவிட்டுள்ளது.