குட்கா ஊழல் வழக்கு-12 பேரை விசாரிக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம்

126

குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா உட்பட 12 பேரை விசாரிக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய முன்னாள் அமைச்சர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள், வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்பட்டதாக கடந்த 2017ம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் ரமணா, சென்னை காவல் ஆணையர்களாக இருந்து ஓய்வு பெற்ற டி.ராஜேந்திரன், ஜார்ஜ் உட்பட 12 பேரிடம் குட்கா வழக்கு தொடர்பாக விசாரணை செய்ய தமிழக அரசிடம் அனுமதி கோரி சிபிஐ கடிதம் எழுதி உள்ளது. தமிழக அரசு தரப்பில் வழங்கப்படும் பதிலின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்கள், ஐபிஎஸ் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடத்த உள்ளது.