Technology Archives - Sathiyam TV

இன்வெஸ்ட்மெண்ட் திட்டங்களுக்கு உதவும் புதிய AI! முதலீட்டாளர்களுக்கு இனி செம ஈசி
முதலீட்டாளர்கள் நிதி தொடர்பான தகவல்களைத் தேடி கூகுள், நிதி வலைத்தளங்கள், சமூக ஊடகப் பிரபலங்கள் எனப் பல இடங்களை அலசி நேரம் வீணாக்குவதை தவிர்க்க உதவும் வகையில், ரூபீசி (Rupeezy) நிறுவனம் ஃபின்ஏஐ (FinAI) என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு (AI)அறிமுகப்படுத்தியுள்ளது

ரூபீசியின் வர்த்தகத் தளத்துடன் இணைந்து செயல்படும் FinAI, சரியான முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம், ISO 27001 சான்றிதழ், AMFI மற்றும் SEBI அங்கீகாரம் ஆகியவற்றுடன் செயல்படும் ரூபீசி, இந்த வசதியை வழங்குகிறது. FinAI, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, முதலீட்டாளரின் இடர் தாங்கும் திறன், இலக்குகள் மற்றும் சந்தைத் தகவல்களை ஆராய்கிறது.

இந்தச் செயற்கை நுண்ணறிவு (AI) கருவி, பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம், அசையாச் சொத்துகள் போன்றவற்றை ஒரு சீரான முதலீட்டுப் போர்ட்ஃபோலியோவில் எப்படிச் சரியான விகிதத்தில் சேர்ப்பது என்பதைப் புரிந்துகொள்ளத் தேவையான விளக்கங்களையும் ஆலோசனைகளையும் தருகிறது. FinAI, ரூபீசியின் டிஜிட்டல் ஆய்வு உதவியாளராகச் செயல்பட்டு, நிதி ஆய்வுகளை எளிமையாக்குகிறது. இது தொழில்நுட்பத்தையும் சந்தை அறிவையும் ஒருங்கிணைத்து, முதலீட்டுத் திட்டமிடலை எல்லோருக்கும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுகிறது

இந்திய முதலீட்டுச் சந்தைக்கு ஏற்ற பிரத்தியேகமான ஆலோசனைகளையும் FinAI வழங்குகிறது. முதலீட்டாளர்கள் பொதுவாகப் பயன்படுத்தும் சொத்து ஒதுக்கீடு முறைகளை விளக்குவதற்காக, இந்த AI கருவி சந்தைத் தரவுகளையும் நிதி தொடர்பான திட்டங்களையும் ஆய்வு செய்கிறது

கூடுதலாக, பயனர்கள் ரூபீசி எம்சிபி சர்வர் (Rupeezy MCP server) மூலம் தங்களுக்கென ஒரு தனிப்பட்ட AI நிதி உதவியாளரை உருவாக்கிக்கொள்ளும் வசதியையும் பெற்றுள்ளனர். சாட்ஜிபிடி (ChatGPT) அல்லது கிளாட் (Claude) போன்ற தளங்களுடன் எந்தவித கோடிங்கும் இல்லாமல் இதை இணைத்து, தங்களுக்கு ஏற்ற நிதி உதவியாளரை உருவாக்கிக்கொள்ளலாம். இதை அமைப்பது மிகவும் எளிதானது, பயன்படுத்தவும் வசதியானது

The post இன்வெஸ்ட்மெண்ட் திட்டங்களுக்கு உதவும் புதிய AI! முதலீட்டாளர்களுக்கு இனி செம ஈசி appeared first on Sathiyam TV.

இனி ‘word, excel’ வேலைகளை AI செய்யும்! – மைக்ரோசாஃப்டின் அதிரடி அப்டேட்!
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கோபைலட் (Copilot) இப்போது ஒரு சாதாரண சாட்பாட் இல்லை; அது ஒரு புத்திசாலித்தனமான ‘ஏஜென்ட்’ ஆக மாறியுள்ளது. நீண்ட காலமாகப் பலரும் எதிர்பார்த்த அந்த ‘Agentic’ வசதிகள், இப்போது மைக்ரோசாஃப்ட் வேர்ட், எக்செல் மற்றும் பவர்பாயிண்ட் போன்ற அப்ளிகேஷன்களில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரை கோபைலட் ஒரு பாசிவ் அசிஸ்டெண்டாக, அதாவது நீங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் உதவியாளராக மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது, அது ஒரு புரோ-ஆக்டிவ் (Pro-active) பணியாளரைப் போல, உங்களுடனே இணைந்து உங்கள் கோப்புகளை உருவாக்கும் மற்றும் திருத்தும் வேலையைச் செய்யப் போகிறது. இனி நீங்கள் வேர்டில் எழுத, எக்செல்-ல் பார்முலா போட, பவர்பாயிண்டில் பிரசன்டேஷன் உருவாக்க என்று ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாகச் சிரமப்படத் தேவையில்லை. கோபைலட்டே உங்கள் உதவியாளராக மாறி அந்த வேலைகளைச் செய்து முடித்துவிடும்.

குறிப்பாக, வேர்டில் ஒரு டிராஃப்டை எழுத, அதை மாற்றியமைக்க, எக்செல்-ல் சிக்கலான தரவுகளை அனலைஸ் செய்து அதற்குரிய பார்முலாக்களை அப்ளை செய்ய, பவர்பாயிண்டில் ஒரு முழு பிரசன்டேஷனைத் தயார் செய்ய என அனைத்தையும் இதுவே கவனித்துக் கொள்ளும்.

இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இது மைக்ரோசாஃப்ட் மாடல்களில் மட்டும் இயங்காது; உங்களுக்குப் பிடித்தமான மற்ற தேர்ட்-பார்ட்டி ஏஐ மாடல்களையும் நீங்கள் இதில் இணைத்துக் கொள்ள முடியும் என்பதுதான். “ஏஐ தானே செய்யும், அது ஏதாவது தவறான மாற்றத்தைச் செய்துவிடுமோ?” என்று பயப்படத் தேவையில்லை. மைக்ரோசாஃப்ட் இதில் பயனர் கட்டுப்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.

ஏஐ செய்யும் ஒவ்வொரு மாற்றத்தையும் நீங்கள் பார்க்கலாம்; உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதை நிராகரித்துவிடலாம். அதாவது, இறுதி முடிவு எப்போதும் உங்கள் கையில் தான் இருக்கும். இந்த வசதிகள் தற்போது மைக்ரோசாஃப்ட் 365 பர்சனல், ஃபேமிலி, பிரீமியம் மற்றும் என்டர்பிரைஸ் என அனைத்துப் பயனர்களுக்கும் கிடைக்கிறது. இந்த மாற்றம் உங்கள் அன்றாட வேலைத்திறனை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை. தொழில்நுட்ப உலகில் இது ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.

The post இனி ‘word, excel’ வேலைகளை AI செய்யும்! – மைக்ரோசாஃப்டின் அதிரடி அப்டேட்! appeared first on Sathiyam TV.

CBSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. எப்படி பார்க்கலாம்?
நாடு முழுவதும் சுமார் 33 லட்சம் மாணவர்கள் கடந்த மாதம் பொதுத்தேர்வு எழுதியிருந்தனர். இந்த நிலையில், CBSE 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. இணையதளம் வாயிலாக தேர்வு முடிவுகளை அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

results.cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post CBSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. எப்படி பார்க்கலாம்? appeared first on Sathiyam TV.

இதய செயலிழப்பை 5 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கும் AI….
இதயம் செயலிழக்கும் அபாயம் ஏற்படுவதை 5 ஆண்டுகளுக்கு முன்னரே கணிக்கும் வகையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் AI கருவியை உருவாக்கியுள்ளனர்….

இதய தசைகள் பலவீனமடையும் போது, அதைச் சுற்றியுள்ள கொழுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் CT ஸ்கேனில் புலப்படாது.AI கருவி இதயத்தைச் சுற்றியுள்ள கொழுப்பு அடுக்குகளில் ஏற்படும் சிறு மாற்றங்களையும் நுணுக்கமாக கண்காணித்து, நோயாளிக்கு செயலிழப்பு ஏற்படும் அபாயம் எவ்வளவு உள்ளது என கணக்கிட்டு Risk Score வழங்குகிறது….

இந்த ஏஐ மென்பொருளை மருத்துவமனைகளில் எடுக்கப்படும் CT ஸ்கேன்களுடன் இணைத்தால் போதுமானது…. இங்கிலாந்தின் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த கருவி 86%
துல்லியமாக முடிவுகளை வழங்கியுள்ளது.தற்போது இந்தத் தொழில்நுட்பத்தை மருத்துவமனைகளில் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.

இது நடைமுறைக்கு வரும்போது, உயிரிழப்புகளை பெருமளவு குறைக்க முடியும் என்ற நம்பிக்கை மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ளது.பொதுவாக, இதய செயலிழப்பு பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்க்காமலும், முறையான உடற்பயிற்சி இல்லாமலும் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவது உள்ளிட்டவற்றாலும் ஏற்படுகிறது….

The post இதய செயலிழப்பை 5 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கும் AI…. appeared first on Sathiyam TV.

GPay Pocket Money : இந்த அம்சம் எப்படி செயல்படும்?
“Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும். இது பணம் செலுத்தும் முறையை இன்னும் எளிமையாகவும் கட்டுப்பாட்டுடனும் மாற்றுகிறது. இதில் ஒரு Primary user (பெற்றோர் அல்லது உறவினர்) இருப்பார். அவர்களுடைய பேங்க் கணக்கிலிருந்து Secondary user (குழந்தைகள்) பணம் செலவழிக்க அனுமதி வழங்கப்படும்.

சுருக்கமாகச் சொல்வதானால், குழந்தைகள் தங்களது சிறிய தேவைகளுக்காக Google Pay (GPay) மூலம் நேரடியாக பணம் செலுத்தலாம். ஆனால் அந்தத் தொகை பெற்றோரின் வங்கி கணக்கிலிருந்தே கழிக்கப்படும். மேலும், செலவு வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் முழுமையாக பெற்றோரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.

இந்த அம்சம் எப்படி செயல்படும்?

Primary user ஆக இருப்பதற்கு, Google Pay ஆப்பில் உங்கள் வங்கி கணக்கு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் அதிகபட்சமாக 5 secondary users-ஐ சேர்க்கலாம்.

ஒரு secondary user-ஐ சேர்க்க, கீழ்கண்டவை அவசியம்:

அவர்களின் மொபைல் எண் உங்கள் contacts-ல் சேமிக்கப்பட்டிருக்க வேண்டும்

அவர்கள் அந்த same number மூலம் Google Pay-யில் பதிவு செய்திருக்க வேண்டும்

அவர்களிடம் UPI ID அல்லது UPI Circle QR இருக்க வேண்டும்

பணப் பரிவர்த்தனையை எப்படி நிர்வகிப்பது?

இந்த “Pocket Money” அம்சத்தின் முக்கிய பலன் அதன் கட்டுப்பாடு மற்றும் நெகிழ்வுத்தன்மை.

பெற்றோர்கள் இரண்டு விதமான முறைகளில் இதை பயன்படுத்தலாம்:

மாத வரம்பு முறை:

மாதத்திற்கு அதிகபட்சம் ₹15,000 வரை ஒரு லிமிட் நிர்ணயிக்கலாம். இந்த வரம்புக்குள், குழந்தைகள் ஒவ்வொரு முறையும் அனுமதி கேட்காமல் தாங்களே பணம் செலுத்தலாம். இது ஒரு prepaid allowance போல செயல்படும்.

ஒப்புதல் முறை:

ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பெற்றோரின் அனுமதி அவசியம். முதலில் குழந்தை ஒரு payment request அனுப்பும், அதை பெற்றோர் approve செய்த பிறகே பணம் செலுத்தப்படும். இது சிறிய குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான முறையாகும்.

The post GPay Pocket Money : இந்த அம்சம் எப்படி செயல்படும்? appeared first on Sathiyam TV.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட OnePlus Nord 6 ஸ்மார்ட்போன் : சிறப்பு அம்சங்கள் என்ன?
சீனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் OnePlus நிறுவனம், தனது புதிய ஸ்மார்ட்போனான OnePlus Nord 6-ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் அதன் சக்திவாய்ந்த பேட்டரி மற்றும் மேம்பட்ட சிப்செட் காரணமாக ஸ்மார்ட்போன் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நார்ட் சீரிஸ் மூலம் பிரீமியம் மிட்-ரேஞ்ச் போன்களை வழங்கிவரும் ஒன்பிளஸ், இந்த புதிய மாடலையும் அதே வரிசையில் வெளியிட்டுள்ளது. இது 8GB மற்றும் 12GB ரேம் ஆகிய இரண்டு விருப்பங்களில் கிடைக்கிறது.

இந்த போனின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே

Android 16 இயங்குதளம்

Snapdragon 8s Gen 4 சிப்செட்

8GB / 12GB ரேம்

256GB ஸ்டோரேஜ்

பின்புற கேமரா: 50MP + 8MP

முன்புற கேமரா: 32MP

9,000mAh பேட்டரி

80W அதிவேக சார்ஜிங் ஆதரவு

ரிவர்ஸ் சார்ஜிங் வசதி

USB Type-C போர்ட்

5G நெட்வொர்க் ஆதரவு

ட்யூயல் சிம் ஸ்லாட்

மூன்று வண்ணங்களில் கிடைக்கும்

இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ. 38,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட OnePlus Nord 6 ஸ்மார்ட்போன் : சிறப்பு அம்சங்கள் என்ன? appeared first on Sathiyam TV.

ரூ. 47,000 அதிரடி தள்ளுபடியில் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் : எப்படி வாங்குவது?
ஆப்பிள் நிறுவனம் தனது 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஐபோன் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்புகளுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், இந்த சலுகைகள் பயனர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன.

இந்த சலுகையை Imagine Store (Apple அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்) மூலம் பெற முடியும். இதில் அதிகபட்சமாக ரூ.47,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

256GB நினைவகத்துடன் வரும் iPhone 17 Pro Max-ன் அறிமுக விலை ரூ.1,49,900 ஆகும். இந்த சலுகையின் மூலம் அதன் விலை ரூ.47,000 குறைக்கப்பட்டு, ரூ.1,02,900 ஆக வழங்கப்படுகிறது.

குறிப்பிட்ட வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.4,000 வரை கூடுதல் தள்ளுபடி அல்லது கேஷ்பேக்

பழைய ஸ்மார்ட்போனை மாற்றி (exchange) கொடுத்தால் ரூ.6,000 வரை கூடுதல் சலுகை

தகுதியான மாடல்களுக்கு ரூ.36,000 வரை எக்ஸ்சேஞ்ச் மதிப்பு

இந்த அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தினால், iPhone 17 Pro Max-ஐ சுமார் ரூ.89,900 வரை குறைந்த விலையில் வாங்க முடியும்.

அதேபோல், iPhone 17 மாடலின் ஆரம்ப விலை ரூ.82,900 ஆக இருந்த நிலையில், சலுகைகள் மூலம் அதை ரூ.37,900 வரை குறைந்த விலையில் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகைகள், புதிய ஐபோன் வாங்க நினைக்கும் பயனர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக கருதப்படுகின்றன.

The post ரூ. 47,000 அதிரடி தள்ளுபடியில் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் : எப்படி வாங்குவது? appeared first on Sathiyam TV.

ஏப்ரல் 14 வரைக்கும் தான் டைம்.. ஜியோவுக்கு டிராய் கடும் எச்சரிக்கை
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ மீது, TRAI (Telecom Regulatory Authority of India) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜியோவின் சில ரீசார்ஜ் திட்டங்கள் வெளிப்படைத்தன்மை இல்லாமல், ஒருதலைபட்சமாக இருப்பதாக TRAI குற்றம்சாட்டியுள்ளது. இதனால், அனைத்து பிளான்களையும் எல்லா தளங்களிலும் ஒரே நேரத்தில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களை ஏப்ரல் 14க்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

TRAI குறிப்பிட்ட முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று, ஜியோ சில மலிவு விலை திட்டங்களை குறிப்பிட்ட தளங்களில் மட்டுமே வழங்குவதாகும். உதாரணமாக, ரூ.249 மற்றும் ரூ.199 போன்ற திட்டங்கள் ஜியோ ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கின்றன. அதேபோல், ரூ.209 திட்டம் MyJio ஆப்பில் மட்டும் வழங்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்களை குழப்புவதோடு விதிமீறலாகும் என்று TRAI தெரிவித்துள்ளது.

மேலும், ஜியோ நிறுவனம் ஜியோ போன் மற்றும் ஜியோ பாரத் போன்ற சாதனங்களுக்கு மட்டும் தனியாக சில மலிவு விலை திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள் மற்ற ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு கிடைக்காததால், இது ஒருதலைபட்சமான நடைமுறையாக TRAI சுட்டிக்காட்டியுள்ளது. அனைத்து மொபைல் பயனர்களுக்கும் சமமான திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு பதிலளித்த ஜியோ, “எங்கள் திட்டங்கள் குறிப்பிட்ட வாடிக்கையாளர் பிரிவை மையமாகக் கொண்டவை. அதனால் இதை ஒருதலைபட்சம் என்று கூற முடியாது. மேலும், சில சேவைகளை ஆன்லைனில் வழங்க இயலாது” என்று விளக்கம் அளித்தது. ஆனால் TRAI இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ளது.

அனைத்து ரீசார்ஜ் திட்டங்களும் ரீடெய்ல் கடைகள், அதிகாரப்பூர்வ இணையதளம், மொபைல் ஆப் மற்றும் கஸ்டமர் கேர் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் ஒரே நேரத்தில் கிடைக்க வேண்டும் என்று TRAI வலியுறுத்தியுள்ளது. மேலும், குறிப்பிட்ட மொபைல்களுக்கு மட்டும் வழங்கப்படும் திட்டங்களையும், அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும்படி மாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை ஏப்ரல் 14க்குள் ஜியோ பின்பற்றவில்லை என்றால், TRAI சட்டம் 1997ன் கீழ் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. முதல் விதிமீறலுக்கு ரூ.1 லட்சம் அபராதமும், தொடர்ந்து ஒவ்வொரு மீறலுக்கும் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மேலும், விதிகளை பின்பற்றும் வரை தினமும் கூடுதல் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஏப்ரல் 14 வரைக்கும் தான் டைம்.. ஜியோவுக்கு டிராய் கடும் எச்சரிக்கை appeared first on Sathiyam TV.

வேலிடிட்டியை குறைத்து பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ.195 கிரிக்கெட் டேட்டா பிளானில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தாலும், இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்தை குறைத்திருப்பது பயனர்களுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்பு, இந்த ரூ.195 பிளான் 90 நாட்கள் வரை செல்லுபடியாக இருந்தது. ஆனால் தற்போது செய்யப்பட்ட மாற்றத்தின் மூலம், அதன் வேலிடிட்டி 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, அதே விலையில் 60 நாட்கள் செல்லுபடியாகும் காலம் குறைக்கப்பட்டதால், இது மாதாந்திர செலவை அதிகரிக்கும் மாற்றமாக பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் டேட்டா சலுகைகள் மாற்றமின்றி தொடர்கின்றன. பயனர்களுக்கு மொத்தமாக 15GB அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா முடிந்த பிறகு, இணைய வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்.

இந்த பிளான் முழுக்க டேட்டா அடிப்படையிலானது என்பதால், இதில் குரல் அழைப்புகள் அல்லது எஸ்எம்எஸ் சலுகைகள் இடம்பெறாது. ஆனால், கூடுதல் பலனாக 90 நாட்களுக்கு JioHotstar மொபைல் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிரிக்கெட் போட்டிகள், திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை பார்க்க முடியும்.

The post வேலிடிட்டியை குறைத்து பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜியோ appeared first on Sathiyam TV.

‘கூகுள் Vids’ சூப்பர் அறிவிப்பு : இனி எல்லோரும் இலவசமாக AI வீடியோக்களை உருவாக்கலாம்
கூகுள் நிறுவனம் தனது Google Vids தளத்தை இனி அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது.

இந்த Vids தளத்தில் சேர்க்கப்பட்டுள்ள புதிய Veo 3.1 மாடல் மூலம், பயனர்கள் ஒரு Prompt-ஐ டைப் செய்வதன் மூலம் அல்லது ஒரு புகைப்படத்தை பதிவேற்றுவதன் மூலம் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோ கிளிப்புகளை உருவாக்க முடியும்.

கூகுள் கணக்கு வைத்துள்ள அனைவரும் மாதத்திற்கு 10 வீடியோக்கள் வரை முற்றிலும் இலவசமாக உருவாக்கிக் கொள்ளலாம். இது இந்தியாவில் உள்ள YouTube யூடியூபர்கள், Instagram ரீல்ஸ் உருவாக்குபவர்கள் மற்றும் சிறுதொழில் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக விளம்பர வீடியோக்கள் அல்லது பிறந்தநாள் வாழ்த்து வீடியோக்களை உருவாக்க இது சிறந்த தேர்வாகும்.

மேலும், காப்புரிமை சிக்கல்கள் இல்லாத இசையை Lyria 3 கருவி மூலம் நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். 30 வினாடிகள் முதல் 3 நிமிடங்கள் வரை உங்கள் தேவைக்கேற்ப இசையை அமைக்க முடியும்.

நீங்கள் கேமரா முன் வர விரும்பவில்லை என்றால், AI Avatars-ஐ உருவாக்கி, அவற்றை பயன்படுத்தி பேசும் வீடியோக்களையும் உருவாக்கலாம். அவற்றின் தோற்றம், பின்னணி மற்றும் பேச்சு முறை ஆகியவற்றை முழுமையாக தனிப்பயனாக்க முடியும்.

வீடியோ உருவாக்கம் முடிந்ததும், அதை தனியாக பதிவிறக்கம் செய்யாமல் நேரடியாக YouTube-இல் பதிவேற்றவும் வசதி உள்ளது.

இந்தியாவில் வீடியோ உள்ளடக்க உருவாக்குநர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த இலவச சேவை பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

The post ‘கூகுள் Vids’ சூப்பர் அறிவிப்பு : இனி எல்லோரும் இலவசமாக AI வீடியோக்களை உருவாக்கலாம் appeared first on Sathiyam TV.