Latest Lifestyle News, Health and Beauty Tips in Tamil

அடிக்கடி தலைவலி வருகிறதா? காரணம் இதுவாக கூட இருக்கலாம்!!
உயிர் வாழ உணவு எவ்வளவு முக்கியமோ, அதைவிட மிக முக்கியமானது தண்ணீர். நமது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் சீராக இயங்குவதற்கும், ரத்த ஓட்டம் முதல் செரிமானம் வரை அனைத்தும் சரியாக நடப்பதற்கும் போதிய அளவு நீர்ச்சத்து மிகவும் அவசியம். பொதுவாக தாகம் எடுத்தால் மட்டுமே நாம் தண்ணீர் குடிக்கிறோம்.

ஆனால், உண்மை என்னவென்றால், உங்களுக்கு தாகம் எடுக்கும் முன்பே உங்கள் உடல் சில ரகசிய சமிக்ஞைகள் மூலம் தனக்குத் தண்ணீர் தேவை என்பதை உணர்த்தத் தொடங்கிவிடும். அந்த எச்சரிக்கை அறிகுறிகளை நீங்கள் சரியாகக் கவனித்தாலே பல உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

உடல் நீர்ச்சத்தை அறிய மிக எளிய வழி உங்கள் சிறுநீரின் நிறத்தைச் சோதிப்பதுதான். உங்கள் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். மாறாக, அது அடர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருந்தால், உங்கள் உடலில் நீர்ச்சத்து மிகக் குறைவாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு உடனடியாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

அதேபோல், காரணமே இல்லாமல் அடிக்கடி தலைவலி ஏற்படுகிறதா? மூளையைச் சுற்றியுள்ள நீர்மத்தின் அளவு குறையும்போது, அது தலைவலியைத் தூண்டும். மருந்துகளைத் தேடி ஓடுவதற்கு முன், ஓரிரு கிளாஸ் தண்ணீர் குடித்துப் பாருங்கள், உங்கள் வலி காணாமல் போகலாம்.

நமது சருமமும் உதடுகளும் கூட தண்ணீரின் தேவையை உரக்கச் சொல்லும். உங்கள் உதடுகள் அடிக்கடி வறண்டு போவதும், சருமம் அதன் பொலிவை இழந்து சுருக்கங்களுடன் காணப்படுவதும் போதிய நீர்ச்சத்து இல்லாததன் அடையாளமே. மேலும், நீங்கள் எப்போதும் சோர்வாகவோ அல்லது எதிலும் கவனம் செலுத்த முடியாமலோ உணர்ந்தால், உங்கள் ரத்தத்தில் ஆக்சிஜனை எடுத்துச் செல்ல போதிய நீர் இல்லை என்பதே அதன் பொருள். வாய் உலர்ந்து போவது மற்றும் வாயில் துர்நாற்றம் வீசுவது போன்றவை கூட, எச்சில் சுரப்பு குறைவதைக் குறிக்கும் – இதுவும் ஒரு வகையான எச்சரிக்கைதான்.

இவை தவிர, தசைப்பிடிப்பு, தலைசுற்றல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் நீர்ச்சத்து குறைபாட்டினால் ஏற்படக்கூடும். குறிப்பாக வெயில் காலத்திலோ அல்லது உடற்பயிற்சி செய்யும் போதோ தசைகள் பிடிப்பது உங்கள் உடலில் எலக்ட்ரோலைட் சமநிலை தவறுவதைக் காட்டுகிறது.

வெறும் தண்ணீராகக் குடிக்கப் பிடிக்காதவர்கள் தர்பூசணி, வெள்ளரிக்காய், ஆரஞ்சு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் உடல் கொடுக்கும் இந்தச் சிறு சிறு அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பதை ஒரு பழக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கை உங்கள் கையில்!

The post அடிக்கடி தலைவலி வருகிறதா? காரணம் இதுவாக கூட இருக்கலாம்!! appeared first on Sathiyam TV.

குளிக்கும் முன் இந்த ஒரு விஷயத்தை மறக்காதீர்கள்!! இந்த ஒரு அலட்சியம் உயிரிழப்புக்கே காரணமாகலாம்!!
வாட்டர் ஹீட்டர் (கீசர்) இன்று பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படும் முக்கியமான மின்சாதனமாகும். குளிர் மற்றும் மழைக்காலங்களில் உடனடியாக சுடுநீரை வழங்கினாலும், சரியான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் அது உயிருக்கு ஆபத்தாக மாறலாம்.

கேஸ் கீசர்களை காற்றோட்டம் இல்லாத குளியலறையில் பொருத்துவது மிகவும் ஆபத்தானது. எரிவாயு எரியும்போது கார்பன் மோனாக்சைடு என்ற விஷவாயு உருவாகும். மூடிய அறையில் இந்த வாயு தேங்கினால் மயக்கம், மூச்சுத்திணறல் மற்றும் உயிரிழப்பு கூட ஏற்படலாம். எனவே கேஸ் கீசர்களை எப்போதும் காற்றோட்டமான இடத்தில் அல்லது குளியலறைக்கு வெளியே பொருத்த வேண்டும்.

எலக்ட்ரிக் கீசர்களிலும் பாதுகாப்பு அவசியம். சரியான எர்திங் இல்லாமை, பழைய வயரிங் அல்லது மின் கசிவு காரணமாக விபத்துகள் ஏற்படலாம். தண்ணீர் சூடான பிறகு கீசரின் சுவிட்சை அணைத்துவிட்டு அதன் பிறகே குளிக்கச் செல்ல வேண்டும். குளியலறையில் எக்ஸாஸ்ட் ஃபேன் இருப்பதும் நல்ல காற்றோட்டத்தை உறுதி செய்யும்.

மேலும், துருப்பிடித்த அல்லது பழுதடைந்த கீசர்களை தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது. ஆண்டுக்கு ஒருமுறையாவது தகுதியான தொழில்நுட்ப நிபுணரைக் கொண்டு பரிசோதனை செய்து பராமரிக்க வேண்டும். சிறிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் வாட்டர் ஹீட்டரை பாதுகாப்பாக பயன்படுத்தி, தேவையற்ற விபத்துகளைத் தவிர்க்கலாம்.

The post குளிக்கும் முன் இந்த ஒரு விஷயத்தை மறக்காதீர்கள்!! இந்த ஒரு அலட்சியம் உயிரிழப்புக்கே காரணமாகலாம்!! appeared first on Sathiyam TV.

வீட்டில் தினமும் பயன்படுத்தும் 3 பின் பிளக்கின் ஆச்சரியமான உண்மை… என்ன தெரியுமா?
வீட்டில் பயன்படுத்தப்படும் ஏசி, ஃபிரிட்ஜ், மைக்ரோவேவ் ஓவன், கீசர் போன்ற அதிக மின்சுமை கொண்ட சாதனங்களில் 3 பின் பிளக் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள ஒரு பின் மட்டும் மற்ற இரண்டையும் விட நீளமாகவும் தடிமனாகவும் இருக்கும்.

இது வெறும் வடிவமைப்பு அல்ல; மின்சார பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட முக்கியமான இன்ஜினியரிங் அம்சமாகும்.

பிளக்கை சாக்கெட்டில் சொருகும்போது நீளமான எர்த் பின் முதலில் இணைப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல் பிளக்கை அகற்றும்போது கடைசியாகவே அந்த எர்த் பின் வெளியே வருகிறது.

இதனால் சாதனத்தில் ஏதேனும் மின் கசிவு ஏற்பட்டால், மின்சாரம் மனித உடல் வழியாக செல்லாமல் எர்த் கம்பி மூலம் பாதுகாப்பாக பூமிக்குள் கடத்தப்படுகிறது. இதன் மூலம் மின்சாரம் தாக்கும் அபாயம் பெருமளவில் குறைகிறது.

மேலும் எர்த் பின் தடிமனாக இருப்பதால் அதை தவறுதலாக ஃபேஸ் அல்லது நியூட்ரல் துளைகளில் நுழைக்க முடியாது. இதனால் தவறான இணைப்புகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. தடிமனான கடத்திக்கு மின் எதிர்ப்பு குறைவாக இருப்பதால், மின் கசிவு ஏற்பட்டால் மின்சாரம் மிக எளிதாக எர்த் வழியாக பூமிக்கு செல்கிறது.

எனவே அதிக மின்சுமை கொண்ட மின்சாதனங்களில் 3 பின் பிளக் பயன்படுத்தப்படுவது பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய அம்சமாகும். இந்த எளிய வடிவமைப்பே பல நேரங்களில் உயிரைக் காக்கும் பாதுகாப்பு அமைப்பாக செயல்படுகிறது.

The post வீட்டில் தினமும் பயன்படுத்தும் 3 பின் பிளக்கின் ஆச்சரியமான உண்மை… என்ன தெரியுமா? appeared first on Sathiyam TV.

சாக்லேட் பற்றி உங்களுக்குத் தெரியாத விசித்திரமான உண்மைகள்!
சாக்லேட்… இந்தப் பெயரைக் கேட்டாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது வாயிலும் எச்சில் ஊறும். ஆனால், நாம் ரசித்துச் சாப்பிடும் ஒவ்வொரு சாக்லேட் துண்டுக்கும் பின்னால், நாம் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத பல சுவாரஸ்யமான உண்மைகள் ஒளிந்துள்ளன. சாக்லேட் பிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அந்த விசித்திரமான பல உண்மைகளை இப்போது பார்க்கலாம்.

முதலாவதாக, சாக்லேட் ஒரு காலத்தில் பணமாகப் பயன்படுத்தப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஆஸ்டெக் (Aztec) நாகரிக மக்கள் கொக்கோ பீன்ஸை, அதாவது சாக்லேட் செய்ய பயன்படும் காயை மிக உயர்ந்த மதிப்பாகக் கருதினர். உணவு, உடைகள் மற்றும் அன்றாடப் பொருட்களை வாங்குவதற்குப் பணத்திற்குப் பதிலாக இந்தக் கொக்கோ பீன்ஸையே அவர்கள் கொடுத்தனர். சுமார் 100 கொக்கோ பீன்ஸை கொடுத்தால் ஒரு முழு வான்கோழியையே வாங்கிவிடலாமாம்!

இரண்டாவதாக, சாக்லேட் காய்க்கும் விதம் மிகவும் விசித்திரமானது. பெரும்பாலான பழங்கள் கிளைகளில் காய்க்கும், ஆனால் சாக்லேட் தயாரிக்கப் பயன்படும் கொக்கோ காய்கள் மரத்தின் தண்டுப் பகுதியிலும், தடிமனான கிளைகளிலும் நேரடியாகக் காய்க்கும். யாரோ ஒருவன் மரத்தின் மீது பந்துகளை ஒட்டி வைத்தது போல இது காட்சியளிக்கும்.

மூன்றாவதாக, நீங்கள் சாப்பிடும் ஒரு சாதாரண சாக்லேட் பார் உருவாவதற்கு சுமார் 400 கொக்கோ பீன்ஸ் தேவைப்படுகிறது. ஒவ்வொரு காயிலும் வெறும் 20 முதல் 60 பீன்ஸ் மட்டுமே இருக்கும் என்பதால், ஒரு சாக்லேட் பார் செய்யப் பல காய்களை அறுவடை செய்ய வேண்டியிருக்கும்.

நான்காவதாக, சாக்லேட் வாயில் போட்ட உடனே கரைந்து போவதற்கு ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது. நமது உடலின் வெப்பநிலையை விடச் சற்று குறைவான வெப்பநிலையிலேயே சாக்லேட் உருகத் தொடங்கும். அதனால்தான் வாயில் போட்டவுடன் அது வெண்ணெய் போலக் கரைகிறது.

ஐந்தாவதாக, பலருக்குப் பிடித்த ஒயிட் சாக்லேட் (White Chocolate) உண்மையில் ஒரு சாக்லேட்டே கிடையாது! இதில் கொக்கோ வெண்ணெய், பால் மற்றும் சர்க்கரை மட்டுமே உள்ளது. சாக்லேட்டிற்கு நிறத்தையும் சுவையையும் தரும் ‘கொக்கோ சாலிட்ஸ்’ இதில் இல்லாததால், இதை உண்மையான சாக்லேட் என்று பல ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக்கொள்வதில்லை.

ஆறாவதாக, சாக்லேட்டில் 600-க்கும் மேற்பட்ட நறுமணங்கள் உள்ளன. இதனால்தான் ஒவ்வொரு சாக்லேட்டும் ஒவ்வொரு விதமான வாசனையைக் கொண்டுள்ளது. ஏழாவதாக, உலகின் முதல் சாக்லேட் பானம் இனிப்பாக இருக்கவில்லை. அது மிகவும் காரமாகவும் கசப்பாகவும் இருந்தது. எட்டாவதாக, உலகின் மிகப்பெரிய சாக்லேட் பார் ஒரு யானையை விட அதிக எடை கொண்டது. அதாவது சுமார் 5,000 கிலோவுக்கும் மேல்!

சாக்லேட் வெறும் உணவு மட்டுமல்ல, அது ஒரு மிகப்பெரிய வரலாறு மற்றும் அறிவியலைக் கொண்டது. இனி நீங்கள் சாக்லேட் சாப்பிடும்போது இந்தச் சுவாரஸ்யமான உண்மைகளும் உங்கள் நினைவுக்கு வரும். சாக்லேட் பற்றிய இந்த ரகசியங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் இதைப் பகிருங்கள்!

The post சாக்லேட் பற்றி உங்களுக்குத் தெரியாத விசித்திரமான உண்மைகள்! appeared first on Sathiyam TV.

ஸ்லிம்மா இருக்கீங்களா? உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை! உஷாரா இருங்க!
பார்க்க நல்ல ‘ஃபிட்’டாகவும், ஒல்லியாகவும் இருப்பவர்களுக்கு எவ்வித உடல்நலப் பிரச்சனையும் வராது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அந்த எண்ணத்தை இப்போதே மாற்றிக் கொள்ளுங்கள். குறிப்பாக இந்திய ஆண்களின் ஆரோக்கியம் குறித்து வெளியாகியுள்ள சமீபத்திய ஆய்வறிக்கை, ஒட்டுமொத்த தேசத்தையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

வெளியில் ஆரோக்கியமான பிம்பத்தைக் கொண்டிருக்கும் பல இந்திய ஆண்கள், தங்களுக்குள்ளே ஒரு மிகப்பெரிய ‘மெட்டபாலிக்’ நெருக்கடியைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அந்த அதிர்ச்சியூட்டும் உண்மை. பார்க்க ஒல்லியாகத் தெரிந்தாலும், 30 மற்றும் 40 வயதிலேயே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற பாதிப்புகளுக்கு இந்திய ஆண்கள் அதிக அளவில் உள்ளாகிறார்கள்.

இதற்கு மிக முக்கியமான காரணமாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுவது ‘விசரல் ஃபேட்’ (Visceral Fat) எனப்படும் உட்புறக் கொழுப்புதான். பொதுவாக உடல் பருமன் என்பது வெளியிலுள்ள தோற்றத்தை வைத்துத் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், இந்த ‘விசரல் ஃபேட்’ என்பது நமது கல்லீரல், இதயம் போன்ற உள் உறுப்புகளைச் சுற்றி ரகசியமாகப் படியும் ஒரு ஆபத்தான கொழுப்பு. ஒரு நபர் சரியான எடையில் (Normal BMI) இருந்தாலும், அவரது உடலுக்குள் இந்தக் கொழுப்புப் படிந்து இன்சுலின் எதிர்ப்புத் திறன் மற்றும் இதய நோய்களைச் சத்தமில்லாமல் உருவாக்குகிறது.

சமீபத்திய தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின்படி, இந்திய ஆண்களிடையே உடல் பருமன் 22 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாகவும், சர்க்கரை நோயின் பாதிப்பு 15 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாகவும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த உடல்நலச் சிக்கல்களுக்குப் பின்னால் நமது மரபணுக்களும் (Genetics) ஒரு மிகப்பெரிய சதி செய்கின்றன.

மற்ற நாட்டு ஆண்களை விட இந்திய ஆண்களின் உடல் அமைப்பு மற்றும் மரபணுக்கள், கொழுப்பைச் சேமித்து வைப்பதிலும் இதய நோய்களை உருவாக்குவதிலும் அதிகத் தாக்கத்தைக் கொண்டுள்ளன. உங்களது அப்பாவுக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ 40 அல்லது 50 வயதில் மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், நீங்கள் பார்க்க எவ்வளவு ஃபிட்டாக இருந்தாலும், உங்களுக்கு அந்த பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம்.

இதைக் கண்டறிய தற்போது ‘பாலிஜெனிக் ரிஸ்க் ஸ்கோர்’ (PRS) போன்ற நவீன மரபணு பரிசோதனைகள் வந்துவிட்டன. இவை உங்களுக்குப் பாதிப்பு வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை மணி அடிக்கும் திறன் கொண்டவை. எனவே, நோயின் அறிகுறிகள் வரும் வரை காத்திருப்பது என்பது ஒரு தற்கொலை முயற்சிக்குச் சமம் என்கிறார்கள் நிபுணர்கள். முறையான உடற்பயிற்சி, சரிவிகித உணவு மற்றும் சீரான தூக்கம் ஆகியவை அவசியம்தான்; ஆனால் அதையும் தாண்டித் தகுந்த இடைவெளியில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது மிக மிக அவசியம்.

குறிப்பாகக் குடும்பப் பின்னணியில் நோய் பாதிப்பு இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். புகைப்பிடித்தல் மற்றும் மதுப் பழக்கத்தைத் தவிர்ப்பதுடன், உங்களது இடுப்பு சுற்றளவைச் சரியாகப் பராமரிப்பதும் உங்களை இந்த ‘சைலண்ட்’ எமனிடமிருந்து காப்பாற்றும். ஆரோக்கியம் என்பது கண்ணுக்குத் தெரிவது மட்டுமல்ல, அது நமக்குள் இருக்கும் உறுப்புகளின் நிலையைப் பொறுத்தது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

The post ஸ்லிம்மா இருக்கீங்களா? உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை! உஷாரா இருங்க! appeared first on Sathiyam TV.

இதயப் பிரச்சனையே வரக்கூடாதா? இந்த மீனை ட்ரை பண்ணுங்க
மீன் பிரியர்கள் சிலர் சிறிய மீன்களை விரும்புவார்கள். இன்னும் சிலர் பெரிய மீன்களை விரும்புவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு மீன் என்றாலே பயமோ குழப்பமோ இருக்கும். முள் இருக்கும், எந்த மீனை தேர்ந்தெடுப்பதென்றே தெரியவில்லை என குழம்பிக் கொண்டிருப்பார்கள் . அப்படியாவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் மீன் இருக்கிறது.அந்த மீன் பாசா. இது முள் இல்லாத, சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு சிறந்த மீன் வகை. இதில் நடுவில் ஒரே ஒரு பெரிய முள் மட்டுமே இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயமின்றி சுவைத்து சாப்பிடலாம்.

மேலும், இதில் உடலுக்கு நன்மை தரும் உயர்தர புரதங்கள் மற்றும் குறைந்த அளவு கொழுப்புகள் நிறைந்துள்ளதால், இது உடல் எடையைக் குறைக்கவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஒரு ‘சூப்பர் ஃபுட்’ ஆகக் கருதப்படுகிறது.பாசா மீனில் புரதம் நிறைந்து இருப்பதால், உடற்பயிற்சி செய்பவர்களும் மற்றும் ஏதேனும் பெரிய அல்லது நீண்ட கால நோயில் இருந்து மீண்டு வருபவர்களும் இந்த மீனைத் தங்களது உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும், இது மிக எளிதாக செரிமானம் ஆகக்கூடியது என்பதால், அளவோடு சாப்பிடும் போது இது அன்றாட உணவில்கூட சேர்த்துக் கொள்ளும்படியாக இருக்கும்.

பாசா மீன் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகக் கருதப்பட்டாலும், சில குறிப்பிட்ட நபர்கள் இதனை எச்சரிக்கையுடன் சாப்பிட வேண்டும்; குறிப்பாக மீன் ஒவ்வாமை உள்ளவர்கள், ஏற்கெனவே சிறுநீரக நோய் அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே இந்த மீனைத் தங்களது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதய ஆரோக்கியத்தைப் பேண நினைப்பவர்கள் இந்த மீனை அதிக எண்ணெயில் பொரிப்பதைத் தவிர்த்து, ஆவியில் வேகவைத்தோ அல்லது மிகக் குறைந்த எண்ணெயில் கிரில் செய்தோ சாப்பிட்டு வரலாம்; அதேபோல தேங்காய் சேர்க்காமல் தக்காளி, புளி மற்றும் பூண்டு போன்ற இயற்கை பொருட்கள் கொண்டு பாரம்பரிய முறையில் குழம்பாகச் சமைத்துச் சாப்பிடுவதும் இதன் முழுமையான ஒமேகா-3 நன்மைகளைப் பெற வழிவகுக்கும்.

The post இதயப் பிரச்சனையே வரக்கூடாதா? இந்த மீனை ட்ரை பண்ணுங்க appeared first on Sathiyam TV.

நீங்கள் இரவில் AC -யில் தூங்குபவரா? இந்த 3 அறிகுறிகள் இருந்தால் உடனே உஷாராகுங்க…
கோடைக்கால வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இன்று பலரது வீடுகளிலும் இரவு நேரங்களில் AC இல்லாமல் தூங்கவே முடிவதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.பகல் முழுவதும் வியர்வையில் நனைந்துவிட்டு, இரவில் குளு குளு ஏசி காற்றில் தூங்குவது நம் உடலுக்குள் சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.இரவு முழுவதும் ஏசி காற்றில் தூங்குபவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், உங்கள் உடலில் தோன்றும் இந்த 3 முக்கிய அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்.

ஏசி மெஷின்கள் அறையில் இருக்கும் வெப்பத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், அங்குள்ள ஈரப்பதத்தையும் (Humidity) முழுமையாக உறிஞ்சிவிடுகின்றன. இதனால், இரவு முழுவதும் வறண்ட காற்றையே நாம் சுவாசிக்க வேண்டியுள்ளது.காலையில் எழுந்தவுடன் தொண்டையில் ஒருவித வறட்சி, வலி அல்லது தொடர் இருமல் இருந்தால், ஏசியின் உலர் காற்று உங்கள் சுவாசப்பாதையைத் தாக்கியுள்ளது.ஆனால், ஏசி அறையில் நீண்ட நேரம் தூங்குவதால் உடலில் ‘டீஹைட்ரேஷன்’ எனப்படும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்கள் வறட்சியடைவதால் தான் இந்த அதிகாலை தலைவலி ஏற்படுகிறது. இது தொடர்ந்தால் சைனஸ் மற்றும் மைக்ரேன் தலைவலியாக மாற வாய்ப்புள்ளது.

இயற்கையான காற்றோட்டம் இல்லாமல், ஏசியின் செயற்கைக் குளிர்ச்சியிலேயே தொடர்ந்து இருக்கும்போது, தோலில் உள்ள ஈரப்பதம் மறைந்து சருமம் சுருக்கமடையத் தொடங்கும். அதேபோல், ஏசியின் குளிர்ந்த காற்று நேரடியாக உடலில் படும்போது, தசைகள் இறுக்கமடைந்து அதிகாலையில் எழுந்திருக்கும்போது கை, கால் மற்றும் மூட்டுகளில் கடுமையான பிடிப்பு அல்லது வலியை ஏற்படுத்தும்.

இந்த அறிகுறிகள் இருந்து விடுபெற இரவு முழுவதும் ஏசியை ஓடவிடாமல், தூங்கச் சென்ற பின் தானாகவே ஆஃப் ஆகும்படி டைமர் செட் செய்வது நல்லது.இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான ஆரோக்கிய வழிகாட்டுதலின் அடிப்படையில் எழுதப்பட்டவை ஆகும் . தொடர் உடல்நலப் பாதிப்புகள் இருந்தால் உடனே தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

The post நீங்கள் இரவில் AC -யில் தூங்குபவரா? இந்த 3 அறிகுறிகள் இருந்தால் உடனே உஷாராகுங்க… appeared first on Sathiyam TV.

கழிவறையில் எவ்வளவு நிமிடம் அமரலாம்? இதுக்கு மேல உட்கார்ந்தா டேஞ்சர்..
இன்றைய சூழலில் பல பேர், ரிலாக்ஸ் செய்வதற்காக ரீல்ஸ் செய்யும் இடமாக கழிவறையைத்தான் கருதுகின்றனர். அங்கு அமர்ந்து கொண்டு மொபைலை பார்க்கும் ஆர்வத்தில், ஒரு சிலர், அரை மணி நேரம் வரை கூட அமர்ந்திருக்கின்றனர். இது, அன்றைய நாளில் கடந்து போகும் விஷயமாக மாறினாலும் நாளடைவில் இது பெரிய பிரச்சனையை உருவாக்கலாம். இது குறித்து பேசும் மருத்துவர்கள், இவை ஏற்படுத்தும் பாதிப்பையும் புட்டு புட்டு வைக்கின்றனர்.

ஒருவர், கழிவறையில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் போது அவர்களுக்கு மலக்குடல் மற்றும் ஆசனவாய் பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில், அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இப்படி தொடர்ந்து ஏற்படுத்தும் அழுத்தத்தால், ஆசனவாயில் வீக்கம் ஏற்பட்டு, மூல நோய் உருவாகிறது.குடலை தாங்குவதிலும், சிறுநீர்ப்பையை தாங்குவதிலும் பெல்விக் தசைகள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. கழிவறையில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கையில் தசைகள் பலவீனம் ஆகும். இதனால், மலம் கழிப்பதில் சிக்கலை ஏற்படுத்துவதோடு, இடுப்பு பகுதியில் பலவீனத்தையும் உண்டாக்கும்.

கழிவறையில் ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் போது, உடலுக்கு கீழான ரத்த ஓட்டம் என்பது குறைந்து விடும். இதனால்தான், இடுப்பு மற்றும் தொடை பகுதிகளுக்கு தேவையற்ற அழுத்தம் ஏற்பட்டு, கால்கள் மரத்துப்போகும்.பெரும்பாலானோர் கழிவறையில் அதிக நேரம் செலவிடுவதற்கு மலச்சிக்கல் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த மலச்சிக்கல் ஏற்படுவதற்கு காரணம், சாப்பிடும் உணவில் குறைந்த அளவு நார்ச்சத்து இருப்பது, போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, உடலுக்கு பயிற்சி கொடுக்காமல் இருப்பது உள்ளிட்டவையால் மலச்சிக்கல் ஏற்படும்.

ஒருவர், கழிப்பறையில் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே செலவிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒருவருக்கு இயல்பாக மலம் கழிக்க வரவில்லை என்றால், தொடர்ந்து கழிவரையில் அமர்ந்திருக்க கூடாது.கழிவறைக்கு செல்கையில், கையில் மொபைல் கொண்டு போவதை தவிர்க்க வேண்டும். இதனால் ஏற்படும் கவனச்சிதறல்தான் நேரம் போவதே தெரியாமல் செய்கிறது.

The post கழிவறையில் எவ்வளவு நிமிடம் அமரலாம்? இதுக்கு மேல உட்கார்ந்தா டேஞ்சர்.. appeared first on Sathiyam TV.

டீ, காபிக்கு குட்பை சொல்லுங்க!! தினமும் 1 கிளாஸ் இளநீர் குடிச்சா உடம்புல என்ன நடக்கும்?
காலைப்பொழுதை நாம் எப்படித் தொடங்குகிறோம் என்பதுதான் அன்று முழுவதும் நம் உடல் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்கிறது. இரவு முழுவதும் பல மணி நேரம் வெறும் வயிறாக இருக்கும் நம் உடல், காலையில் நாம் கொடுக்கும் உணவையோ அல்லது பானத்தையோ மிக வேகமாக உறிஞ்சும் தன்மையைக் கொண்டது. இந்த நேரத்தில் பலரும் டீ, காபி அல்லது கனமான உணவுகளைத் தேடிச் செல்லும் நிலையில், இளநீரைக் குடிப்பது நம் உடலுக்குக் கொடுக்கும் நன்மைகள் குறித்துப் பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. வெயில் காலத்திற்கு மட்டும் உகந்தது என்று நாம் நினைக்கும் இளநீரை, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

முதலாவதாக, இரவு முழுவதும் தூங்கி எழுந்திருக்கும் போது நம் உடல் லேசான நீர்ச்சத்து குறைபாட்டுடன் (Mild Dehydration) இருக்கும். இளநீரில் சுமார் 94 சதவீதம் தண்ணீரும், அதோடு பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகளும் நிறைந்துள்ளன. இதனை வெறும் வயிற்றில் குடிக்கும் போது, உடலின் நீர்ச்சத்து மிக வேகமாகவும் திறம்படவும் மீட்டெடுக்கப்படுகிறது. இரண்டாவதாக, இது நம் செரிமான மண்டலத்தை மெதுவாகவும் இதமாகவும் தூண்டிவிடுகிறது. இளநீரில் உள்ள இயற்கையான என்சைம்கள் மற்றும் பயோஆக்டிவ் சேர்மங்கள் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தீர்க்க உதவுவதோடு, வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகளையும் தடுத்து குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.

மூன்றாவதாக, இளநீரில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் சத்து, இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. வெறும் வயிற்றில் குடிக்கும் போது இந்த தாதுக்கள் முழுமையாக உறிஞ்சப்பட்டு, இதயத்தின் மீதான அழுத்தத்தைக் குறைத்து ஒட்டுமொத்த ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. நான்காவதாக, இது உடலுக்கு ஒரு சிறந்த இயற்கை நச்சு நீக்கியாக (Natural Detox) செயல்படுகிறது. காலையில் இளநீர் குடிப்பது சிறுநீர் உற்பத்தியை அதிகரித்து, இரவு முழுவதும் உடலில் சேர்ந்த நச்சுக்களை வெளியேற்றுகிறது. இது சிறுநீரகத்தின் செயல்பாட்டை ஊக்குவிப்பது மட்டுமின்றி, சிறுநீரகக் கற்கள் உருவாவதையும் தடுக்கிறது. ஐந்தாவதாக, காஃபின் நிறைந்த டீ, காபிக்கு மாற்றாக, இளநீரில் உள்ள இயற்கைச் சர்க்கரையும் தாதுக்களும் உடலுக்குத் தொய்வில்லாத, நீடித்த ஆற்றலைத் தந்து நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.

இருப்பினும், எந்தவொரு நல்ல விஷயத்தையும் அளவோடு எடுத்துக்கொள்வதுதான் நல்லது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இளநீரை அளவுக்கு அதிகமாகக் குடித்தால் உடலில் பொட்டாசியத்தின் அளவு அதிகரித்து, அது சிறுநீரகத்தைப் பாதிக்கலாம் அல்லது லேசான வயிற்று உபாதைகளை ஏற்படுத்தலாம். எனவே, தினமும் காலையில் 200 முதல் 250 மில்லி லிட்டர், அதாவது ஒரு கிளாஸ் அளவுக்கு மட்டும் புதிய இளநீரைக் குடிப்பது நல்லது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட இளநீரைத் தவிர்த்து, இயற்கையான இளநீரைத் தேர்ந்தெடுப்பதும், அதைக் குடித்த 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு காலை உணவைச் சாப்பிடுவதும் அதன் முழுமையான பலன்களை நம் உடலுக்குக் கொண்டு சேர்க்கும்.

The post டீ, காபிக்கு குட்பை சொல்லுங்க!! தினமும் 1 கிளாஸ் இளநீர் குடிச்சா உடம்புல என்ன நடக்கும்? appeared first on Sathiyam TV.

காலையில் ஒரு கப் டீ குடிப்பவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்குத்தான்…
காலையில் ஒரு சூடான தேநீர் இல்லாமல் பலருக்குப் பொழுதே விடியாது. ஒரு கவலை என்றாலும் சரி, ஒரு உற்சாகமான உரையாடல் என்றாலும் சரி, இந்தியர்களின் வீடுகளில் டீ இல்லாமல் எதுவும் நடக்காது. ஆனால், நாம் இவ்வளவு விரும்பி குடிக்கின்ற இந்தத் தேநீரின் ஆணிவேர் இந்தியா கிடையாது என்று சொன்னால் நம்புவீங்களா? ஆமாம், தேநீரின் வரலாறு 5000 ஆண்டுகளுக்கு முன்னால் பண்டைய சீனாவில் தொடங்குகிறது.

கிமு 2737-ல் சீனப் பேரரசர் ஷென் நாங் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தண்ணீர் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மேலிருந்து சில இலைகள் அந்தத் தண்ணீரில் விழுந்தன. அந்தத் தண்ணீரை அவர் குடித்தபோது, அது அவருக்கு ஒரு புதுவிதமான உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் தந்தது. இதுதான் உலகத்தின் முதல் கப் டீ! ஆரம்பத்தில் சீனர்கள் இதை ஒரு மருந்தாகத்தான் பயன்படுத்தினார்கள். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் இது ஒரு பானமாக மாறியது. சீனர்கள் டீயை பால் அல்லது சர்க்கரை சேர்க்காமல் அப்படியே அதன் இயற்கையான சுவையோடு குடிப்பதை இன்றும் ஒரு கலை வடிவமாகவே பார்க்கிறார்கள்.

சரி, இந்த டீ இந்தியாவுக்கு எப்படி வந்தது? 17-ம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து ஐரோப்பாவுக்குத் தேநீர் அறிமுகமானது. தேயிலை வியாபாரத்தில் சீனாவின் ஏகபோகத்தை உடைக்க நினைத்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம், இந்தியாவின் அசாம் காடுகளில் வளர்ந்த காட்டுத் தேயிலைச் செடிகளைக் கண்டுபிடித்தது. சீனத் தேயிலையை விட அசாம் தேயிலை இலைகள் பெரியதாகவும், மிகுந்த சுவை கொண்டதாகவும் இருந்தன. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் டீ என்பது இந்தியர்களின் வீடுகளுக்குள் ஒரு அத்தியாவசியப் பொருளாக மாறியது.

ஆனால், சீனர்கள் கொடுத்த டீயை நாம் அப்படியே விட்டுவிடவில்லை. சீனர்கள் அமைதியாகவும், தியானத்தோடும் குடித்த அந்தத் தேநீரை, இந்தியர்களாகிய நாம் பால், சர்க்கரை, இஞ்சி, ஏலக்காய் மற்றும் மசாலாக்களைச் சேர்த்து ‘மசாலா சாய்’யாக மாற்றினோம். சீனாவுக்கு தேநீர் என்பது ஒரு தியானம் என்றால், இந்தியாவுக்கு அது ஒரு கொண்டாட்டம் மற்றும் உரையாடலின் தொடக்கம். அலுவலக இடைவேளைகள் முதல் ரயில் பயணங்கள் வரை இந்தியாவை இணைக்கும் ஒரு புள்ளியாக தேநீர் இருக்கிறது.

இனிமேல் நீங்கள் ஒவ்வொரு முறை ஒரு கப் சூடான டீயைக் கையில் எடுக்கும்போதும், அந்த 5000 ஆண்டு கால வரலாற்றையும் சேர்த்தே குடிக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

The post காலையில் ஒரு கப் டீ குடிப்பவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்குத்தான்… appeared first on Sathiyam TV.