India - Sathiyam TV

பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!
ஐநா சபையில் பாகிஸ்தானின் விஷமத்தனமான பொய் பிரசாரத்திற்கு இந்தியா தற்பொழுது ஒரு அதிரடியான இராஜதந்திர பதிலடியைக் கொடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் பிரதிநிதி மீண்டும் கிளப்பிய நிலையில், அதற்குப் பதிலடி கொடுத்த இந்திய இராஜதந்திரி அனுபமா சிங், பாகிஸ்தானை ஒரு “பிராங்கண்ஸ்டைன் தேசம்” (Frankenstein State) என்று வர்ணித்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தான் வளர்த்த அரக்கனே தன்னைத் திரும்பக் கடிக்கும் போது அதிர்ச்சியடையும் ஒரு விசித்திரமான நாடுதான் பாகிஸ்தான் என்று அவர் சாடியது சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளிப்பதும், அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து ஏவி விடுவதும் பாகிஸ்தானின் அரசு கொள்கையாகவே மாறிவிட்டது என்பதை அவர் ஆணித்தரமாகப் பதிவு செய்தார்.

காஷ்மீர் குறித்துப் பேசிய அனுபமா சிங், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பிரிக்க முடியாத மற்றும் மாற்ற முடியாத பகுதி என்பதை மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் உறுதிப்படுத்தினார். தற்பொழுது இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை, இந்தியாவின் பகுதிகளான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை அவர்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்திருப்பது மட்டும்தான் என்று சுட்டிக்காட்டினார்.

அங்கு ராவலகோட் போன்ற பகுதிகளில் ரொட்டி, மின்சாரம் மற்றும் அடிப்படை உரிமைகளைக் கேட்டுப் போராடும் சாமானிய மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகளை அவர் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார். துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை மூலம் மட்டுமே ஒரு சட்டவிரோத ஆக்கிரமிப்பைத் தக்கவைக்க முடியும் என்பதற்குப் பாகிஸ்தான் ஒரு வாழும் உதாரணம் என்று அவர் சாடினார்.

பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான், தன்னைத் தானே ஒரு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடாகச் சொல்லிக் கொள்வது ஒரு மிகப்பெரிய முரண்பாடு என்று இந்தியா சாடியுள்ளது. பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சரே தங்களது நாட்டில் பயங்கரவாதிகள் உருவாக்கப்படுவதை வெளிப்படையாகப் பெருமை பேசிக் கொள்ளும் நிலையில், உலக நாடுகளை ஏமாற்றப் பாகிஸ்தான் முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார்.

இத்தகைய சூழலில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் போன்ற பழைய உடன்படிக்கைகளைத் தற்போதைய நிலையில் தொடர்ந்து நீட்டிக்க முடியாது என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்தார். கடந்த 1960-ஆம் ஆண்டு போடப்பட்ட இந்தச் சிந்து நதி நீர் ஒப்பந்தம், இன்றைய மாறி வரும் காலத்திற்கும் யதார்த்தமான சூழலுக்கும் துளியும் பொருந்தாது என்று அனுபமா சிங் குறிப்பிட்டார்.

ஒரு பக்கம் பயங்கரவாதத்தை ஆயுதமாகப் பயன்படுத்திக்கொண்டு, மறுபக்கம் நட்புறவின் அடிப்படையில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் பலன்களை மட்டும் அனுபவிக்கத் துடிப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை தற்போதைய சூழலில் அப்படியே வைத்திருக்க முடியாது என்ற இந்தியாவின் இந்தத் தெளிவான நிலைப்பாடு, இராஜதந்திர ரீதியாகப் பாகிஸ்தானிற்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

The post பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா! appeared first on Sathiyam TV.

6000 சம்பளம் வாங்கும் அரசு ஊழியர் வீட்டில் கட்டு கட்டாக பணம்! பார்த்ததுமே தலை சுற்றி போன அதிகாரி
ஒடிஷாவில் முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையிலான பாஜக அரசு அமைந்து, பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இந்த சூழலில், அங்குள்ள மாநில பழங்குடியினர் மேம்பாட்டு முகமையின் உதவி நிர்வாக இன்ஜினியராக பணியாற்றி வரும் வைகுண்டநாத் என்பவர் மீது, வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அடுத்தடுத்து புகார்கள் குவிந்தன. இந்த புகார்களின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை அறிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் களத்தில் இறங்கினர்

அப்போது வைகுண்டநாத்தின் வீடு மற்றும் வங்கி லாக்கர்களில் இருந்து மட்டும் கணக்கில் வராத ரூபாய் 2.40 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை எண்ணி முடிப்பதற்குள் அதிகாரிகளுக்கு தலைசுற்றல் வந்துவிட்டது.அது மட்டுமின்றி வைகுண்டநாத் பெயரில் 5 பிரம்மாண்ட அப்பார்ட்மென்ட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதில் 4 அடுக்குமாடி கட்டிடங்கள் தலைநகர் புவனேஸ்வரிலேயே கட்டப்பட்டுள்ளன. இவற்றின் இப்போதைய சந்தை மதிப்பு மட்டுமே 20 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இது தவிர, புவனேஸ்வர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள 13 வீட்டு மனைகளுக்கான சொத்து ஆவணங்களும் அதிகாரிகளிடம் சிக்கின. மேலும் 341 கிராம் தங்க நகைகள் மற்றும் 45 லட்சம் ரூபாய் வங்கி வைப்புத்தொகையையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.கடந்த 1999ம் ஆண்டில் வெறும் 6,000 ரூபாய் மாத சம்பளத்தில் இளநிலை இன்ஜினியராக தான் வைகுண்டநாத் தனது அரசு பணியை ஆரம்பித்துள்ளார்.. அதன் பிறகு 2016ல் உதவி இன்ஜினியராகவும், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உதவி நிர்வாக இன்ஜினியராகவும் அடுத்தடுத்து பதவி உயர்வுகளை பெற்றிருக்கிறார்..

தனது 20 ஆண்டுகால அரசுப் பணியில், பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக அரசு ஒதுக்கிய நிதியையும், தன் அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்தி, அவர் எப்படியெல்லாம் கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார் என்பது இந்த சோதனையின் மூலம் அம்பலமாகியுள்ளது.ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டிய ஒரு அரசு அதிகாரி, கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த சம்பவம் ஒடிஷாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

The post 6000 சம்பளம் வாங்கும் அரசு ஊழியர் வீட்டில் கட்டு கட்டாக பணம்! பார்த்ததுமே தலை சுற்றி போன அதிகாரி appeared first on Sathiyam TV.

பெட்ரோல், டீசல் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு செய்ய போகும் செயல்
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் மார்ச் மாதம் முதல் ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய், எல்பிஜி சப்ளை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது . கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் , கேஸ் விலைகளை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதன் காரணமாக பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. சாதாரண மக்களின் குடும்ப செலவு ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது.அதுமட்டுமில்லாமல் எண்ணெய் விலை உயர்வால் கையிருப்பில் இருக்கும் அமெரிக்கா டாலரும் குறைந்து வருகிறது

இந்நிலையில் கையிருப்பில் இருக்கும் டாலர் அளவு குறையாமல் இருக்கவும்,அதே வேளையில் டாலர் வரத்தை அதிகரிக்க வேண்டும். இதற்காக அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வரி விலக்கு அளித்து மத்திய அரசு முக்கிய கொள்கை மாற்றம் கொண்டு வந்துள்ளது.இதுவரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்து வருமானம் பார்க்கும் போது இரண்டு முக்கியமான வரிகளைச் செலுத்த வேண்டியிருந்தது.ஒன்று நீண்ட கால மூலதன ஆதாய வரி (LTCG -12.5% ) .அடுத்ததாக வட்டி மீதான வரி (Withholding Tax -20%) அரசு பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு விதிக்கப்படும் வரி.

எனவே வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்திய பத்திரங்களில் செய்யும் முதலீட்டு வரி கிடையாது என்பதால் கையில் கிடைக்கும் லாபம் அதிகரிக்கும். எனவே முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் முதலீடு செய்வார்கள். இதனால் அமெரிக்க டாலர் வந்து குவியும். இவ்வாறு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக டாலரை கொண்டு வரும் போது இந்திய ரூபாயின் மதிப்பு உயரும்.பங்குச்சந்தையில் செய்யப்படும் முதலீடுகள் குறுகிய காலத்தில் வெளியேற வாய்ப்புள்ளது. ஆனால், அரசுப் பத்திரங்களில் செய்யப்படும் முதலீடுகள் நீண்ட காலத்திற்குச் நிலையாக இருக்கும். இது இந்தியப் பொருளாதாரத்திற்குப் பாதுகாப்பைத் தரும். டாலர் வரத்து அதிகமாகும் போது நம் கைவசம் டாலர் சேமிப்பு அதிகமாகும். எனவே தடையின்றி நம்மால் கச்சா எண்ணெய் வாங்க முடியும். கச்சா எண்ணெய் தடையின்றி வாங்கினால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்

The post பெட்ரோல், டீசல் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு செய்ய போகும் செயல் appeared first on Sathiyam TV.

புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம்.. ரூ.500 நோட்டு செல்லுமா ?
இந்தியப் பணச் சந்தையில் தற்போதைய காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட காலம் உழைக்கக்கூடிய பாலிமர் எனப்படும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து ரிசர்வ் வங்கி தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வேகமாக வளர்ந்து வந்த போதிலும், ரொக்கப் பணப் புழக்கம் அதிமாகவே உள்ளது, இதனால் புதிய காகித நோட்டுகளை அச்சிடுவதற்கான செலவுகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த மாற்றுத் திட்டம் மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டிற்கு வந்தால் தற்போது புழக்கத்தில் இருக்கும் காகித ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என்று மத்திய அரசு அறிவிக்குமா அல்லது அவற்றை மாற்றச் சொல்லி கட்டாயப்படுத்துமா என்ற ஒரு மிகப்பெரிய பயமும், கேள்வியும் சாமானிய மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.இதற்க்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் பாலிமர் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கான இந்தத் திட்டம் தற்போது மிகவும் ஆரம்பக் கட்டத்தில் (Preliminary Stage) மட்டுமே உள்ளது. இதன் நன்மைகள் மற்றும் சவால்கள் குறித்து ரிசர்வ் வங்கி விரிவாக ஆய்வு செய்து வருகிறது. இதில் இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே, பொதுமக்கள் இது குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை” என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளதால், தற்போது ஏடிஎம் இயந்திரங்களைப் பிளாஸ்டிக் நோட்டுகளுக்கு ஏற்ப எளிதாக மாற்றியமைக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற 60-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பாலிமர் ரூபாய் நோட்டுகளை முழுமையாகப் பயன்படுத்தி வரும் வேளையில், இந்தியாவும் இந்த டிஜிட்டல் மற்றும் நவீனப் பொருளாதாரப் புரட்சிக்குத் தற்போது தயாராகி வருகிறது.

The post புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம்.. ரூ.500 நோட்டு செல்லுமா ? appeared first on Sathiyam TV.

ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு கிடைத்த விடிவுகாலம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நீண்டநாள் நிலுவை கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றும் நோக்கில், சேவை நிலை தொடர்பான ஆணைகள் வழங்கும் நடைமுறையை துரிதப்படுத்த கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.2004, 2005, 2006 ஆம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பின்னர் 2006 ஜூன் 1 முதல் காலமுறை ஊதிய முறையில் பணிநியமனம் பெற்றனர்.

இந்த சூழலில், 2016 ஜூன் 1 அன்று தேர்வு நிலை பெற்ற ஆசிரியர்கள் தற்போது 2026 ஜூன் 1 அன்று சிறப்பு நிலை பெற்றுள்ளனர். ஆனால் பலருக்கும் அதற்கான அதிகாரப்பூர்வ ஆணைகள் இன்னும் வழங்கப்படாததால், ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு வட்டாரத்திலும் சிறப்பு முகாம்கள் நடத்தி ஆசிரியர்களின் சேவை விவரங்களை சரிபார்த்து, நிலுவை ஆணைகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் செயல்முறை வேகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேநேரத்தில், தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் சுற்றறிக்கை வெளியிட்டு பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தியுள்ளார். முகாம்களில் தாமதம் அல்லது குறைபாடு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது

The post ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு கிடைத்த விடிவுகாலம் appeared first on Sathiyam TV.

போக்குவரத்து அபராதம் 50% தள்ளுபடி! ஜூன் 21 முதல் ஜூலை 10 வரை தான் டைம்
கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள வாகன உரிமையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது நிலுவையில் உள்ள போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்கான 50% தள்ளுபடி திட்டத்தை கர்நாடக அரசு மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு ஜூன் 04 பிறப்பிக்கப்பட்டது.இத்திட்டம் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளுக்குப் பயனளிப்பதோடு, பல்வேறு துறைகளின் கீழ் நிலுவையில் உள்ள பழைய போக்குவரத்து அபராதத் தொகைகளை வசூலிக்கும் நடைமுறையைச் சீரமைக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 50% தள்ளுபடி திட்டமானது காவல் துறையின் e-challan அமைப்பில் மே 2026-க்கு முன் பதிவு செய்யப்பட்ட நிலுவை வழக்குகள் மற்றும் 1991 மற்றும் 2022-க்கு இடைப்பட்ட காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்காகப் போக்குவரத்துத் துறையால் விதிக்கப்பட்ட நிலுவை அபராதங்களும் இதில் அடங்கும்.
அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியான நிலுவை போக்குவரத்து விதிமீறல் வழக்குகளுக்கு மட்டுமே இந்தத் தள்ளுபடி பொருந்தும். குறிப்பிட்ட கால வரம்பிற்குள் நிலுவையில் உள்ள சலான் அல்லது போக்குவரத்து தொடர்பான அபராதங்களைக் கொண்ட வாகன உரிமையாளர்கள், அறிவிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

போக்குவரத்து காவல் நிலையத்திலோ அல்லது பெங்களூருவின் போக்குவரத்து மேலாண்மை மையத்திலோ அபராதத் தொகையைச் செலுத்தலாம். கூடுதல் வசதிக்காக, இணையம் வாயிலாகச் செலுத்தும் வசதிகளும் உள்ளன. Karnataka One இணையதளம் மற்றும் Asram மற்றும் KSPS ஆகிய மொபைல் செயலிகள் மூலமாகவும் நிலுவைத் தொகையைச் செலுத்தலாம் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.நீண்ட காலமாக நிலுவையில் உள்ள போக்குவரத்து அபராத வழக்குகளை மக்கள் தீர்த்துக்கொள்ள உதவுவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

The post போக்குவரத்து அபராதம் 50% தள்ளுபடி! ஜூன் 21 முதல் ஜூலை 10 வரை தான் டைம் appeared first on Sathiyam TV.

டாப் லிஸ்டில் வந்த தமிழ்நாடு – வியந்து பார்க்கும் தேசம்
இந்தியாவில் வங்கிக் கணக்குகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மிக அதிவேகமாக வளர்ந்து வரும் இப்போதைய சூழலில், வங்கிக் கடன் பெறுவதில் தமிழ்நாடு மிக பிரம்மாண்டமான சாதனை படைத்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள மிகத் துல்லியமான மாவட்ட வாரியான கடன் மற்றும் வைப்புத் தொகை தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.இந்த ஆய்வறிக்கையில் ஒட்டுமொத்த நாட்டின் வங்கிக் கடனில் சுமார் 27.76 சதவீத பங்கினைத் தமிழ்நாடு மட்டுமே பெற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.

மாநில வாரியாகக் கணக்கிடப்பட்ட இந்தத் தேசியக் கடன் பட்டியலில், தமிழ்நாடு முதலிடத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், எப்போதும் முதலிடத்தில் இருக்கும் மராட்டிய மாநிலம் 27.70 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திற்குத் சென்றது . இதற்க்கு அடுத்தபடியாக கர்நாடகா, குஜராத் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.தமிழ்நாடு இந்த முன்னணி நிலையை அடைந்ததற்குப் பின்னால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் அசுரத்தனமான தொழில் மற்றும் வணிக மையங்களின் வளர்ச்சியே மிக முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

சென்னை, கோவை, திருப்பூர், ஓசூர், சேலம் மற்றும் திருச்சி ஆகிய நகரங்கள் தொழில் துறையில் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றன. வாகன உற்பத்தி, அதிநவீன தகவல் தொழில்நுட்பம், உலகத்தரம் வாய்ந்த ஜவுளி ஏற்றுமதி, தோல் பொருட்கள் உற்பத்தி, பிரம்மாண்ட பொறியியல் தொழில்கள், சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் துறைமுக வர்த்தகம் எனப் பல்வேறு துறைகளில் தமிழ்நாடு இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.நாட்டின் மிக முக்கியப் பொருளாதார மையமாகத் திகழும் மராட்டிய மாநிலத்தையே பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு இந்த அசுர வளர்ச்சியை எட்டியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது

The post டாப் லிஸ்டில் வந்த தமிழ்நாடு – வியந்து பார்க்கும் தேசம் appeared first on Sathiyam TV.

பிரேக் அப் செய்த காதலிக்கு 20 கத்திக்குத்து – அலுவலகத்தில் அரங்கேறிய கொடூரம்
பிரேக் அப் செய்த தனது காதலியை, அவரது முன்னாள் காதலன் 20 முறை குத்தி கொலை செய்திருப்பது அதிர்சிச்யை ஏற்படுத்தியிருக்கிறது. பஞ்சாபில் உள்ள மொகாலி என்கிற பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் டிம்பிள் என்கிற பெண் ஒருவர், தன்னுடன் வேலை பார்க்கும் ஹர்விந்தர் மான் என்கிற நபருடன் காதல் உறவில் இருந்து வந்துள்ளார். இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு அந்தப் பெண் உறவை முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

வழக்கம்போல வேலைக்கு வந்த அந்த பெண்ணிடம், முன்னாள் காதலன் அவரிடம் இருவரின் உறவு குறித்து பேசி பிரச்சனை செய்திருக்கிறார். கொஞ்ச நேரத்தில் இந்த பிரச்சனை விவாதமாக மாறி இரு தரப்பிலும் கத்தி சண்டை போட ஆரம்பித்திருக்கின்றனர். பின்னர் தனது மேஜையில் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த டிம்பிளை அவரது முன்னாள் காதலன் கத்தியால் பின்னால் இருந்து கத்தியால் குத்தி இருக்கிறார்.தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அந்த பெண் எழுந்து ஓடுகையில் அவரை விடாமல் பிடித்து இழுத்து அருகில் இருந்த கதவருகே வைத்து சரமாரியாக குத்தியுள்ளார் அந்த காதலன். அருகிலிருந்த ஊழியர்கள் அவரை தடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்களின் முயற்சி வீணாகியுள்ளது. டிம்பிளை அவர் 20 முறை குத்தியதால் அவர் அசைவற்று இருந்திருக்கிறார்.

டிம்பிளை குத்திய பின், அந்த நபர் தன் கழுத்திலும் முப்பது முறை கத்தியை வைத்து குத்தி இருக்கிறார். இதற்குள் அருகில் இருந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இருவரையும் தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்று இருக்கின்றனர். ஆனால் டிம்பிளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறி இருக்கின்றனர். குற்றவாளி உயிருக்கு ஆபத்தான நிலை இருப்பதாக கூறி இருக்கின்றனர்.சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். உயிரிழந்த டிம்பிளின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்த பிற தகவல்கள், மேலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post பிரேக் அப் செய்த காதலிக்கு 20 கத்திக்குத்து – அலுவலகத்தில் அரங்கேறிய கொடூரம் appeared first on Sathiyam TV.

இனி இவர்களுக்கு சிலிண்டர் மானியம் கிடைக்காது: அரசு போட்ட 2 கண்டிஷன்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றத்தால் உலகம் முழுவதும் பல அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு பற்றிய செய்திகள் மக்களுக்கு பெரும் பீதியை அளித்தன.இந்த சூழலில் மத்திய அரசு வழங்கி வரும் சிலிண்டர் மானியம் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு பெரிய நிவாரணமாக உள்ளது.

நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பாக ஏற்கனவே பல சிக்கல்கள் நிலவி வருகின்றன. முறையான இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு சிலிண்டர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைத்துவிடுகின்றன. ஆனால் இணைப்பு இல்லாதவர்கள், கள்ளச்சந்தையில் விற்பனையாளர்களிடமிருந்து சிலிண்டர்களை வாங்குவது தற்போது மிகவும் கடினமாகிவிட்டது. அப்படியே வாங்கினாலும், அவை வழக்கமான விலையை விட இரண்டு அல்லது நான்கு மடங்கு அதிக விலையில் விற்கப்படுகின்றன. மேலும், எரிவாயு சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியம் தொடர்பாகவும் பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் ஜூன் மாதத்தில் பலருக்கு எரிவாயு மானியம் கிடைக்காது என்று சமீபத்தில் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.ஒரு LPG நுகர்வோர் அல்லது அவரது வாழ்க்கைத் துணையின் ஆண்டு வரிக்குட்பட்ட வருமானம் ரூ. 10 லட்சத்தைத் தாண்டினால் அவர்கள் LPG மானியத்திற்குத் தகுதி பெற மாட்டார்கள்.மேலும் ஒரு கூட்டுக் குடும்பத்தில், ஒரே முகவரியில் இரண்டு தனித்தனி இணைப்புகள் ,ஒன்று பெற்றோரின் பெயரிலும், மற்றொன்று வருமானம் ஈட்டும் மகனின் பெயரிலும் இருந்தால், பெற்றோரின் தனிப்பட்ட வருமானம் குறைவாக இருக்கும் பட்சத்தில், பெற்றோரின் பெயரிலுள்ள இணைப்பு தொடர்ந்து மானியத்தைப் பெறும்.இந்த விதிமுறை 2015ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள சூழலில், தற்போது இது கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அரசாங்கத்தின் புதிய விதிமுறையின்படி, எரிவாயு சிலிண்டர் நுகர்வோர் இனி மானியத்தைப் பெறுவதற்கு ‘e-KYC’ செயல்முறையை நிறைவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தங்கள் எரிவாயு கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத வாடிக்கையாளர்களுக்கு மானியம் கிடைக்காது. மேலும், ஜூன் 30-க்குள் e-KYC-ஐ நிறைவு செய்வது அவசியம் என்பதால், e-KYC செயல்முறையை முழுமையாக முடிக்காதவர்களுக்கும் மானியம் கிடைக்காது.

உங்களால் e-KYC-ஐ இணையவழியில் நிறைவு செய்ய முடியாவிட்டால், உங்களுக்கு அருகிலுள்ள எரிவாயு விநியோகஸ்தர் அல்லது எரிவாயு முகமை அலுவலகத்திற்கு நேரில் செல்லவும். அங்கு செல்லும்போது உங்கள் ஆதார் அட்டை, எரிவாயு இணைப்புக்கான பாஸ்புக் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்லவும். அங்குள்ள ஊழியர் உங்கள் கைரேகையைப் பதிவு செய்வார். அதன் மூலம் உங்கள் e-KYC செயல்முறை உடனடியாக நிறைவு செய்யப்படும்.

The post இனி இவர்களுக்கு சிலிண்டர் மானியம் கிடைக்காது: அரசு போட்ட 2 கண்டிஷன் appeared first on Sathiyam TV.

PAN கார்டு புது ரூல்ஸ்.. இனி ரூ.50000 லிமிட் க்ளோஸ்..
இந்தியாவில் வருமான வரி விதிகளில் 2026 ஆம் ஆண்டுக்கான முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. புதிய வருமான வரி விதிகள் (Income Tax Rules 2026) மூலம் PAN பயன்படுத்த வேண்டிய பரிவர்த்தனைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சில பரிவர்த்தனைகளில் PAN காட்டும் கட்டாயம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், சில பெரிய நிதி பரிவர்த்தனைகளில் விதிகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.அந்த வகையில் இதற்கு முன் ஒரே நாளில் ரூ.50,000 தொகையை தாண்டி வங்கியில் பணம் செலுத்தினால் PAN card விவரங்களை கொடுக்க வேண்டியது அவசியமாக இருந்தது. ஆனால், புதிய விதிகளின்படி இந்த நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. இது ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே, ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் ரொக்கமாக பணத்தை செலுத்தினால் மட்டுமே பான் கார்டு விவரங்கள் தேவைப்படும்.

சொத்து வாங்குதல் மற்றும் விற்பனை தொடர்பான விதிகளிலும் பெரிய மாற்றம் வந்துள்ளது. முன்பு ரூ.10 லட்சத்தை தாண்டிய சொத்து பரிவர்த்தனைகளுக்கு PAN card விவரங்கள் அவசியமாக இருந்த நிலையில், தற்போது அந்த வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ரூ.45 லட்சத்திற்கும் அதிகமான சொத்து பரிவர்த்தனைகளில் PAN card விவரங்கள் கட்டாயமாகும்.மேலும் வெளிநாட்டு பயணம் மற்றும் வெளிநாட்டு கரென்சியை வாங்குதல் தொடர்பாக தனியாக பான் கார்டு விவரங்களை காட்ட வேண்டிய பிரிவு நீக்கப்பட்டுள்ளது.

காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் அதிக மதிப்புள்ள பிரீமியங்களும் தற்போது வருமான வரித்துறையின் கண்காணிப்புக்குள் வருகின்றன.PAN card வைத்திருப்பவர்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக காப்பீட்டு பிரீமியம் செலுத்தினால் அந்த தகவல் அறிக்கையிடப்படும். PAN இல்லாதவர்களுக்கு இந்த வரம்பு ரூ.2.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல், விருந்தினர் மாளிகை, கன்வென்ஷன் சென்டர் மற்றும் நிகழ்ச்சி நிர்வாக நிறுவனங்களுக்கு ரொக்கமாக பணம் செலுத்தும் வரம்பும் மாற்றப்பட்டுள்ளது.

ரூ.5 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ள வாகனங்களுக்கு பான் கார்டு விவரங்கள் அவசியமாகும். இந்த விதியில் தற்போது இருசக்கர வாகனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் டிராக்டர்கள் இந்த வரம்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளன. மேலும், PAN இல்லாதவர்கள் பயன்படுத்தி வந்த படிவம் 60 (Form 60) ஆனது தற்போது நீக்கப்பட்டு அதற்கு பதிலாக படிவம் 97 (Form 97) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ரூ.45 லட்சத்திற்கும் அதிகமான சொத்து பரிவர்த்தனைகளில் படிவம் 97 ஏற்கப்படாது. PAN card கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.

இந்த புதிய விதிகள் சிறிய பரிவர்த்தனைகளில் பொதுமக்களுக்கு சற்று நிவாரணம் அளிப்பதோடு, பெரிய அளவிலான பணப்பரிவர்த்தனைகள் மற்றும் சொத்து ஒப்பந்தங்களை வருமான வரித்துறை மிக நெருக்கமாக கண்காணிக்க உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர்

The post PAN கார்டு புது ரூல்ஸ்.. இனி ரூ.50000 லிமிட் க்ளோஸ்.. appeared first on Sathiyam TV.