Crime Archives - Sathiyam TV

நெல்லை; 5 வயது மகன், தந்தை கொடூர கொலை… கனிமொழி கண்டனம்…
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே தந்தையும் அவரது 5 வயது மகனும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்கெட்டுவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு என்ற ஒன்றே இல்லாமல் ஆகிவிட்டது. தவெக அரசு,…
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) July 3, 2026

The post நெல்லை; 5 வயது மகன், தந்தை கொடூர கொலை… கனிமொழி கண்டனம்… appeared first on Sathiyam TV.

இரவில் தூங்கிய குழந்தை… காலையில் சடலமாக மீட்பு!! இடையில் என்ன நடந்தது? திகிலூட்டும் உண்மை!!
ராமநாதபுரம் எம்எஸ்கே நகர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம், அப்பகுதி மக்களை மட்டுமல்லாமல் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிக்க தாத்தா வீட்டிற்கு வந்த ஐந்து வயது சிறுமி, மறுநாள் காலை உயிரிழந்த நிலையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த பாலகணேஷ்–செல்வி தம்பதியினரின் ஐந்து வயது இரட்டையர் மகள்கள் சாய் தீப்தி மற்றும் சாரு நித்திகா. வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு செல்வி, ராமநாதபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழித்த குழந்தைகள், இரவு உணவுக்குப் பிறகு அனைவருடனும் வீட்டில் உறங்கினர்.

அதிகாலை நேரத்தில் வீட்டுக்குள் அதிக புழுக்கமாக இருந்ததால், முன்பக்க கதவை திறந்துவிட்டு மீண்டும் தூங்கியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். காலை எழுந்தபோது, இரட்டையரில் ஒருவரான சாய் தீப்தி மட்டும் காணாமல் போனது அனைவரையும் பதற்றத்தில் ஆழ்த்தியது.

உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், உடனடியாக ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். வீடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அருகில் உள்ள ஒரு வீட்டின் கிணற்றில் சிறுமி உயிரிழந்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, கிணற்றிலிருந்து சிறுமியின் உடலை மீட்டனர். பின்னர் உடல், உடற்கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மகளின் உடலைக் கண்ட பெற்றோர் கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்தச் சம்பவத்தில் முக்கியமான சந்தேகத்தை ஏற்படுத்தியது, சிறுமி மீட்கப்பட்ட கிணற்றின் அமைப்புதான். கிணற்றைச் சுற்றி உயரமான பாதுகாப்புச் சுவர் இருந்ததாக கூறப்படுவதால், ஐந்து வயது குழந்தை தானாகவே அந்தக் கிணற்றுக்குள் விழுந்திருக்க வாய்ப்பு குறைவா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், போலீசார் இதை சாதாரண விபத்தாகக் கருதாமல், சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் நடந்த பகுதி முழுவதும் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன. சம்பவ நேரத்தில் யாரேனும் வீட்டின் அருகே வந்தார்களா, சிறுமி தனியாக வெளியே சென்றாரா அல்லது வேறு ஏதேனும் மர்ம பின்னணி உள்ளதா என்பதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில், தகவலறிந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜு மருத்துவமனைக்கு சென்று சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இந்த நிலையில், போலீஸ் விசாரணையில், தூங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சிறுமியின் தாய் மாமாவின் மனைவி சபரிகா (21) சிறுமியை பொறாமையில் கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிக்க வந்த ஒரு சிறுமியின் உயிரிழந்த இந்தச் சம்பவம், ராமநாதபுரம் முழுவதும் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

The post இரவில் தூங்கிய குழந்தை… காலையில் சடலமாக மீட்பு!! இடையில் என்ன நடந்தது? திகிலூட்டும் உண்மை!! appeared first on Sathiyam TV.

2026-லும் இப்படியொரு கொடூரம்? ஆரணியில் மீட்கப்பட்ட 19 உயிர்கள்!! தமிழகத்தையே உலுக்கிய ‘நரகம்’!
நவீன யுகத்தில் நாம் பயணித்துக் கொண்டிருந்தாலும், தமிழகத்தின் ஒரு பகுதியில் 19 மனித உயிர்கள் கடந்த 8 ஆண்டுகளாக நரக வாழ்க்கையை வாழ்ந்து வந்த அதிர்ச்சித் தகவல் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சிறுமூர் கிராமத்தில், ஒரு செங்கல் சூளையில் 3 சிறுவர்கள் உட்பட 19 பேர் கொத்தடிமைகளாகச் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது.

சிறுமூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் என்பவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது விவசாய நிலத்தில் செங்கல் சூளை நடத்தி வந்துள்ளார். இங்குத் திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினரோடு தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.

ஆனால், அங்கு நடந்தவை அனைத்தும் மனித உரிமைகளை மீறும் கொடுமையான செயல்கள். தொழிலாளர்களுக்குச் சொற்ப தொகையை முன்பணமாகக் கொடுத்துவிட்டு, அவர்களைத் தனது சூளையை விட்டு எங்கும் வெளியே செல்ல விடாமல் சுந்தரம் கட்டிப்போட்டுள்ளார். ஒரு சிறைச்சாலையில் கைதிகள் அடைக்கப்படுவதைப் போல, இந்த 19 தொழிலாளர்களையும் கடந்த 8 ஆண்டுகளாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளார்.

ஒரு நாளைக்கு 12 மணி நேரம் கடுமையான உழைப்பு, ஆனால் அதற்கேற்ற ஊதியம் கிடையாது. சொந்த ஊருக்கோ அல்லது உறவினர்களைப் பார்க்கவோ கூட அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெளியில் இருப்பவர்களுக்குத் தங்களது நிலைமை தெரிந்துவிடக்கூடாது என்பதில் அந்த உரிமையாளர் மிகக் கவனமாக இருந்து வந்துள்ளார்.

ஒருவழியாகத் தனது துயர நிலையை வெளியே சென்ற ஒரு நபரிடம் அந்த தொழிலாளர்கள் ரகசியமாகத் தெரிவிக்க, அந்த தகவல் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் காதுகளுக்குச் சென்றது. இதையடுத்து, மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழு துணை நீதிபதி விஜயலட்சுமி தலைமையில் ஒரு அதிரடி மீட்புக் குழு அமைக்கப்பட்டது.

ஆரணி வருவாய் கோட்டாட்சியர் சிவா, டிஎஸ்பி சுரேஷ் சண்முகம் மற்றும் வருவாய்த் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த செங்கல் சூளைக்கு மின்னல் வேகத்தில் சென்றனர். அங்கு நடந்த சோதனையில், மூன்று சிறுவர்கள் உட்பட 19 பேர் மிக மோசமான சூழலில் கொத்தடிமைகளாக வேலை செய்வதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ந்து போயினர்.

உடனடியாக அந்த 19 பேரையும் மீட்ட அதிகாரிகள், அவர்களை அரசு வாகனங்களில் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்குத் தேவையான உணவுகள், உடைகள் மற்றும் முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அவர்களின் விபரங்களைக் கேட்டறிந்த அதிகாரிகள், அவர்களைப் பாதுகாப்பாகத் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

அதே சமயம், இத்தனை ஆண்டுகளாக மனிதர்களை அடிமையாக வைத்துச் சூளை நடத்தி வந்த சுந்தரம், போலீசாரைக் கண்டதும் தலைமறைவாகிவிட்டார். அவர் மீது ஆரணி கிராமிய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். 2026-லும் இப்படியொரு கொடூரமான கொத்தடிமை முறை நிலவி வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

The post 2026-லும் இப்படியொரு கொடூரம்? ஆரணியில் மீட்கப்பட்ட 19 உயிர்கள்!! தமிழகத்தையே உலுக்கிய ‘நரகம்’! appeared first on Sathiyam TV.

இளம் பெண்ணை முகத்தில் கல்லால் தாக்கிய கொடூர காதலன்… பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரல்…
இளம் பெண் ஒருவரை இளைஞர் கல்லால் முகத்தில் கொடூரமாக தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. நடந்தது என்ன? விரிவாக பார்க்கலாம் இந்த க்ரைம் தொகுப்பில்.

திருச்சி காஜாமலை பகுதியில் தந்தை பெரியார் கல்லூரி மத்திய மண்டல ஐஜி அலுவலகம் அதன் அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என காவல்துறை சார்ந்த அதிகாரிகள் உயர்மட்ட அலுவலகங்கள் இருக்கிறது.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் மற்றும் இளம் பெண் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருச்சியில் உள்ள பிரபல கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த அந்த இளைஞர் தில்லைநகரில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

அவரை காதலித்து வந்த கல்லூரி மாணவி காஜாமலையில் உள்ள தந்தை பெரியார் கல்லூரியில் பயின்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு மாணவியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தனது காதலனிடம் கூறியுள்ளார் எதுவாக இருந்தாலும் நேரில் பேசிக் கொள்ளலாம் என அவரை நேரில் அழைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேரில் பேசுவதற்காக வந்த மாணவியிடம் நீண்ட நேரமாக காதலன் காதல் குறித்து பேசி உள்ளார். இதில் உடன்படாத மாணவியை ஆத்திரமடைந்த மாணவன் கொடூரமாக தாக்கி முகத்தில் கல்லால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாணவி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்த சக பொதுமக்கள் மாணவியை மீட்டு தனியார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாணவியை தாக்கிய அந்த இளைஞரை விரட்டி பிடித்து காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கே கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இளம் பெண்ணை முகத்தில் கல்லால் தாக்கிய கொடூர காதலன்… பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரல்… appeared first on Sathiyam TV.

மாணவியை மிரட்டி நிர்வாண வீடியோ!! தந்தைக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்… சக மாணவர்கள் 3 பேர் கைது!!
கிருஷ்ணகிரி அடுத்த ராயக்கோட்டை சாலை பகுதியில் உள்ள வாடகை வீட்டில் 14 வயது பள்ளி மாணவன் ஒருவன், பெற்றோருடன் தங்கி தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த நிலையில் ஏதோ சில காரணங்களால் கடந்த 6 மாதமாக பள்ளிக்கு செல்லவில்லை எனக்கூறப்படுகிறது. இந்த நிலையில் இவருடன் 9ம் வகுப்பு படித்த சக மாணவி ஒருவர், இவரது வீட்டின் மேல் மாடியில் வாடைக்கு குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

14 வயது இடை நின்ற பள்ளி மாணவனின் சக பள்ளி நண்பர்கள் 2 பேர் அவ்வப்போது இடைநின்ற பள்ளி மாணவனின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். அவர்கள் வந்து செல்லும் போது மேல் வீட்டில் அவர்களது சக பள்ளி வகுப்பு மாணவி ஒருவர் இருப்பதை பார்த்துள்ளனர். சிறிது நாட்கள் அவர்கள் வந்து சென்ற நிலையில், அந்த மாணவி குறித்து இடைநின்ற பள்ளி மாணவனிடம் விசாரித்துள்ளனர்.

இடைநின்ற பள்ளி மாணவனோ, அந்த மாணவியின் இன்ஸ்டா ஐடி, பேஸ்புக் ஐடி, மொபைல் நம்பர் என அனைத்தும் தனக்கு தெரியும் எனவும், என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் எனவும் கூறியுள்ளார்.

பின்னர் 3 பேரும் சேர்ந்து அந்த மாணவியின் இன்ஸ்டா ஐடியை தேடி பார்த்து முதலில் அதில் இருந்த அந்த மாணவியின் புகைப்படங்களை டவுன்லோடு செய்து வைத்துள்ளனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து புதியதாக ஒரு பேக் இன்ஸ்டா ஐடியை உருவாக்கியுள்ளனர்.

அந்த ஐடியில் இருந்து அந்த மாணவிக்கு ரெக்கொஸ்ட்டு கொடுத்துள்ளனர். பின்னர் மெதுவாக மெசேஜ் மூலம் பேச ஆரம்பித்துள்ளனர். பின்னர் அந்த மாணவிக்கு மெசேஜில் மிடட்டும் விதமாக பேசியுள்ளனர்.

அதாவது நீ பள்ளியில் யார், யாருடன்,பேசுகிறாய்? யாரை லவ் பண்ணுகிறாய்? உங்க அக்கா யாரை லவ் பண்றாங்க ? உங்க அக்கா கூட யார், யாரெல்லாம் பழக்கம்? எல்லாமே எங்க கிட்டா வீடியோவா இருக்கு, என மிரட்டியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த மாணவி, எதுவும் செய்து விடாதீர்கள் என இன்ஸ்டா மேசேஜிலேயே கெஞ்சியதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் ஏற்கனவே சேவ் செய்து வைத்திருந்த அந்த மாணவியின் படத்தை ஆடையின்றி மார்ப்பிங் செய்து மீண்டும் அந்த பெண்ணிற்கே அனுப்பியதுடன்,

இந்த படங்களையும், இதே போல உள்ள உங்க அக்காவின் போட்டோக்களையும் சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். மேலும் நாங்கள் இதையெல்லாம் செய்யாமல் இருக்க வேண்டுமானால், நீ ஆடையில்லாமல் உன்னை முழுமையாக வீடியோ மற்றும் போட்டோக்களை எடுத்து அனுப்ப வேண்டும் என கேட்டுள்ளனர்.

இதனால் பயந்து போன அந்த மாணவி, வேறு வழியின்றி ஆடை இல்லாமல் வீடியோ மற்றும் போட்டோக்களை எடுத்து அந்த ஐடிக்கே அனுப்பியுள்ளார்.

அந்த வீடியோ மற்றும் போட்டோக்களை டவுன்லோடு செய்து கொண்ட அவர்கள், மாணவியின் தந்தைக்கு இன்ஸ்டாவில் அனுப்ப இன்ஸ்டாவை பக்கத்தை தேடியுள்ளனர். ஆனால் அவருக்கு இன்ஸ்டாவில் அக்கவுண்ட் இல்லாததால், அவரது மொபல் எண்ணை வாங்கி, அந்த எண்ணின் வாட்ஸ் அப்பிற்கு, மாணவியின் ஆடையில்லாத வீடியோ மற்றும் படங்களை, கீழ் வீட்டில் இருக்கும் இடைநின்ற பள்ளி மாணவனின் செல்போன் எண்ணில் இருந்தே அனுப்பியுள்ளனர்.

மேலும் இவற்றை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம், அப்படி பரப்பினால் உங்கள் மானம் கப்பலேறி நீங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள வேண்டியது தான் எனவும், அவ்வாறு செய்யக்கூடாது என்றால் 10 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் எனவும் மிரட்டியுள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை, கீழ் வீட்டில் இருந்த இடைநின்ற மாணவனிடம் சென்று கேட்க, அவனோ இந்த நம்பரை எனது நண்பன் தான் பயன்படுத்துகிறான் என அவனை காட்ட அவனும், இவன் கூறியது போல் இன்னொரு நண்பனை காட்ட, கடைசியில் 3 பேரும் சேர்ந்து பிளான் போட்டு இந்த குற்றத்தில் ஈடுப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து மாணவியின் தந்தை கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பள்ளி மாணவர்கள் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் கூர்நோக்கு மையத்தில் அடைத்தனர்.

ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் பள்ளி படிக்கும் போதே மாணவ, மாணவிகளிடம் திணிக்கப்படும் செல்போன்களால், இன்ஸ்டா, உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டு, திசை மாறி இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.

The post மாணவியை மிரட்டி நிர்வாண வீடியோ!! தந்தைக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்… சக மாணவர்கள் 3 பேர் கைது!! appeared first on Sathiyam TV.

டெல்லி IRS மகள் கொலையில் வெளிவந்த பகீர் உண்மைகள்! அந்த 15 நிமிடம் நடந்தது என்ன?
தலைநகர் டெல்லியில் 4 அடுக்கு பாதுகாப்புகளையும் மீறி, ஒரு ஐ.ஆர்.எஸ் அதிகாரியின் 22 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. ஐ.ஐ.டி-யில் பட்டம் பெற்று, குடிமைப் பணித் தேர்வுகளுக்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்த ஒரு லட்சியப் பெண்ணின் வாழ்க்கை, பணத்தாசை பிடித்த ஒரு கயவனால் அநியாயமாகப் பறிக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் கைலாஷ் ஹில்ஸ் பகுதியில் நடந்த இந்த கொடூரக் கொலையில், அந்த குடும்பத்தின் முன்னாள் உதவியாளரான 23 வயது ராகுல் மீனா கைது செய்யப்பட்டுள்ளார். பிடிபட்ட அந்த நபர், தான் செய்த குற்றத்திற்காக எவ்வித வருத்தமும் இன்றி, “பணம் கொடுக்க மறுத்ததால் மற்றவை தானாகவே நடந்துவிட்டன” என்று மிகச் சாதாரணமாகக் கூறியிருப்பது போலீசாரையே அதிர வைத்துள்ளது.

இந்தக் கொலை அரங்கேறுவதற்கு முன்பே ராகுல் மீனா எவ்வளவு கொடூரமானவன் என்பது அவனது கடந்த காலச் செயல்கள் மூலம் தெரியவந்துள்ளது. டெல்லிக்கு வருவதற்கு முந்தைய நாள், ராஜஸ்தானின் அல்வாரில் தனது நண்பனின் மனைவியை அவன் பாலியல் வன்புணர்வு செய்துள்ளான். அங்கிருந்து தப்பிக்கத் தனது செல்போன்களை விற்று, வாடகை கார் எடுத்துக்கொண்டு டெல்லி வந்துள்ளான்.

அந்த ஐ.ஆர்.எஸ் அதிகாரி வீட்டில் ஏற்கனவே வேலை செய்தவன் என்பதால், அவர்களுக்குத் தெரியாமல் வீட்டின் மாற்றுச் சாவியை எங்கு வைப்பார்கள், பெற்றோர்கள் எப்போது ஜிம்முக்குச் செல்வார்கள் என்ற ரகசியங்கள் அவனுக்கு அத்துபடி. அந்தப் பெண்ணின் தளம் நான்கு பூட்டுகளால் பாதுகாக்கப்பட்டிருந்தும், டிஜிட்டல் பாஸ்வேர்டுகளை அறிந்திருந்த ராகுல் மீனா, மிக எளிதாக உள்ளே நுழைந்துள்ளான்.

வீட்டிற்குள் நுழைந்தவன் அந்தப் பெண்ணின் படிக்கும் அறைக்குச் சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளான். வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கிருந்த கனமான பொருளால் அந்தப் பெண்ணின் முகத்தில் தாக்கி, செல்போன் சார்ஜர் கேபிளால் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளான்.

அந்தப் பெண் மயக்கமடைந்த நிலையில் இருந்தபோது அவரைப் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் அவன் ஒப்புக்கொண்டுள்ளான். பணத்தாசை பிடித்த அந்த மிருகம், வீட்டின் பயோமெட்ரிக் லாக்கரைத் திறக்க, ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்தப் பெண்ணின் விரலைப் பிடித்து ஸ்கேனரில் அழுத்தியுள்ளான். ஆனால் அது தோல்வியடைந்ததால், அங்கிருந்த ஸ்க்ரூடிரைவரைப் பயன்படுத்தி லாக்கரை உடைத்து 2.5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பித்துள்ளான்.

குற்றத்தைச் செய்த பிறகு எவ்வித பதற்றமும் இன்றி தனது ஆடைகளை மாற்றிக்கொண்டு அங்கிருந்து வெளியேறிய அவன், துவாரகா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பதுங்கியிருந்தபோது போலீசாரிடம் சிக்கினான். ஆன்லைன் சூதாட்டம் மற்றும் போதைப்பழக்கத்திற்கு அடிமையான அவன், இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு நீக்கப்பட்ட ஆத்திரத்தில் இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியுள்ளான்.

பாதுகாக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளிலும் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டும் இந்தச் சம்பவம், நம் வீட்டு உதவியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. ஒரு இளம் பெண்ணின் எதிர்காலத்தைச் சிதைத்த அந்தக் கொலையாளிக்குத் தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

The post டெல்லி IRS மகள் கொலையில் வெளிவந்த பகீர் உண்மைகள்! அந்த 15 நிமிடம் நடந்தது என்ன? appeared first on Sathiyam TV.

மாணவிக்கு கொடூர தாக்குதல்; கஞ்சா போதையில் 3 பேர் கும்பல் அதிர்ச்சி செயல்…மீஞ்சூரில் பரபரப்பு!!
மீஞ்சூர் அருகே இரவு வீட்டிமீஞ்சூர் அருகே இரவு வீட்டில் படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை கஞ்சா போதையில் தாக்கிய கும்பல். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மர்ம ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையம் முற்றுகை..நடந்தது என்ன? விரிவாக பார்க்கலாம்..

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வல்லூர் வாலாஜா நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு அப்பகுதியை சேர்ந்த 17 வயது முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி தேர்விற்காக படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த 3 பேர் கொண்ட கும்பல், கொள்ளையடிக்க வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், மாணவியை கண்டதும் பாலியல் இச்சையில் ஈடுபட முயன்ற மர்மகும்பல் கையில் இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றது. மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இந்த சூழலில், மர்ம கும்பலில் ஒருவனை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த மாணவி மீஞ்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் மீஞ்சூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அமைதியான இடமாக இருந்த தங்களது குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதை அதிகரித்து இருப்பதாகவும், கஞ்சா போதை ஆசாமிகளால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

மர்ம கும்பலில் ஒருவன் மட்டுமே பிடிபட்டுள்ளதாகவும் மற்ற இருவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையடிப்பதற்காக மட்டுமே மர்ம கும்பல் வந்ததா, வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாணவிக்கு கொடூர தாக்குதல்; கஞ்சா போதையில் 3 பேர் கும்பல் அதிர்ச்சி செயல்…மீஞ்சூரில் பரபரப்பு!! appeared first on Sathiyam TV.

ஓமலூர் அருகே பள்ளி வளாகத்திலேயே ஆசிரியை வெட்டிப் படுகொலை
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அங்கு பணியாற்றி வரும் ஆசிரியர் ஸ்ரீவித்யாவை அவருடைய கணவரே வெட்டி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் அந்தப் பகுதியில் போலீசார் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.

கொலை நிகழ்ந்த பள்ளி வளாகத்திற்கு நேரில் சென்றுள்ள ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ் குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த கொலை சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post ஓமலூர் அருகே பள்ளி வளாகத்திலேயே ஆசிரியை வெட்டிப் படுகொலை appeared first on Sathiyam TV.

2வது திருமணத்திற்கு இடையூறாக இருந்த குழந்தை : கொன்று வீசிய கொடூர தாய்
மராட்டிய மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள ரஞ்சன்காவ் எம்.ஐ.டி.சி. பகுதியில் பூஜா பவார் (22) என்பவர் வசித்து வந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தில், தனது மனைவியும் 11 மாத குழந்தையும் காணாமல் போனதாக பூஜா பவாரின் கணவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தேடுதலில், ஏப்ரல் 5ஆம் தேதி ஜம்புட் கிராமத்தில் பூஜா பவார் மட்டும் தனியாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவரிடம் குழந்தை குறித்து விசாரித்தபோது, “குழந்தை தவறி கீழே விழுந்து இறந்துவிட்டது. பயந்ததால் உடலை பையில் வைத்து கிணற்றில் வீசியதாக கூறியுள்ளார். அவரது பதில்களில் சந்தேகம் இருந்ததால் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, பூஜா பவார் தனது வாக்குமூலத்தில், “என் கணவரை விட்டுவிட்டு வேறு திருமணம் செய்ய நினைத்தேன். அதற்கு என் 11 மாத குழந்தை தடையாக இருந்தது. குழந்தை எப்போதும் அழுதுகொண்டே இருந்ததால் கோபத்தில் அதன் தலையை துணி துவைக்கும் கல்லில் அடித்து கொலை செய்தேன். பின்னர் உடலை ஒரு பையில் வைத்து விவசாய கிணற்றில் வீசியேன்” என்று ஒப்புக்கொண்டார்.

இதைக் கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர் காட்டிய கிணற்றில் இருந்து குழந்தையின் உடலை அழுகிய நிலையில் மீட்டனர். இந்த சம்பவத்தையடுத்து, போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பூஜா பவாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொடூர சம்பவம் புனே பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

The post 2வது திருமணத்திற்கு இடையூறாக இருந்த குழந்தை : கொன்று வீசிய கொடூர தாய் appeared first on Sathiyam TV.

காதலியை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த கடற்படை அதிகாரி
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில், கள்ளக்காதல் தொடர்பான தகராறு காரணமாக ஒரு இந்திய கடற்படை அதிகாரி தனது காதலியை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் மறைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கடற்படையில் பணியாற்றி வந்தவர் சிந்தடா ரவீந்திரா (30). இவருக்கும் போலிப்பள்ளி மௌனிகா (31) என்பவருக்கும் 2021-ம் ஆண்டு டேட்டிங் செயலி மூலம் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் இந்த நட்பு காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.

2024-ம் ஆண்டு ரவீந்திரா மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகும் மௌனிகாவுடன் உறவு தொடர்ந்தது. ஆனால், காலப்போக்கில் இருவருக்கும் இடையே சச்சரவு அதிகரித்தது.

மௌனிகா தன்னிடமிருந்து சுமார் 3.5 லட்சம் ரூபாய் பெற்றதாகவும் அதை திருப்பித் தரவில்லை என்றும் ரவீந்திரா கூறியுள்ளார். மேலும், அவர்களுடைய உறவை ரவீந்திராவின் மனைவியிடம் தெரிவிப்பேன் என்று மௌனிகா மிரட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த ரவீந்திரா கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

சம்பவத்திற்கு முன், ரவீந்திராவின் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மௌனிகாவை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அன்று இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் கோபமடைந்த ரவீந்திரா, மௌனிகாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், ஆன்லைன் மூலம் கத்தி வாங்கி, உடலை பல துண்டுகளாக வெட்டியுள்ளார்.

உடல் பாகங்களை பிரித்து, சிலவற்றை பிரிட்ஜில் வைத்தும், சிலவற்றை ட்ராலி பேக்கில் வைத்தும் மறைத்துள்ளார். மேலும், தலை மற்றும் கைகளை வேறு இடத்திற்கு கொண்டு சென்று எரித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ரவீந்திரா தானாகவே போலீசில் சரணடைந்தார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், போலீசார் வீட்டில் சோதனை நடத்தியபோது பிரிட்ஜில் உடல் பாகங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

ரவீந்திரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மௌனிகாவின் காணாமல் போன உடல் பாகங்களைத் தேடும் பணியில் தனிப்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post காதலியை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த கடற்படை அதிகாரி appeared first on Sathiyam TV.