கொரோனா பேட்ச்-பட்டம் பெற்ற “பூனை”

267
Advertisement

சமீப காலமாக,மனிதனின் வாழ்வில் பிணைந்திருக்கும் நாய்கள் போலவே பூனைகள் தன் பாசத்தை வெளிப்படுத்தும் வீடியோக்கள்  இணையத்தில் உலாவருகிறது.

இங்கும் அப்படி தான் பூனை ஒன்று  இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துவருகிறது.கொரோனா பெரும்தோற்றுக்கு பிறகு மக்களின்  நடைமுறை வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பாக கல்வியில்.

எந்த அளவு என்றார் தேர்வு கூட ஆன்லைன்  நடைபெற்றது.இந்நிலையில் அமெரிக்காவின்  ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று  பூனை ஒன்று பட்டம் பெற்று உள்ளது.

இது குறித்து அதன் உரிமையாளர்  பெண் கூறுகையில் “ஆம், நான் பங்கேற்ற  ஒவ்வொரு ஜூம்  விரிவுரையிலும் என் பூனை கலந்து கொண்டது, எனவே நாங்கள் இருவரும் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவோம்.” என  தெரிவித்துள்ளார்.

பட்டம் பெறுவது போல் கருப்பு அங்கி மற்றும் தலையில் தொப்பி உடன் போட்டோவிற்கு தன் உரிமையாளருடன் போஸ் கொடுக்கும் பூனையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.