ஐந்தே வினாடிகளில் பாம்பை பிடித்து சென்ற பூனை 

51
Advertisement

பாம்பிடம் சண்டையிடும் கீரிப்பிள்ளை போன்று பூனை ஒன்று சாலையில் பாம்பை சண்டையிட்டு தன் வாயால் பிடித்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், வாகனம் செல்லும் சாலையில் பூனை ஒன்று   சாலையை கடக்கமுயன்ற பாம்பு ஒன்றை அச்சுறுத்துகிறது,பாம்பும் பூனையின் தாக்குதலில் இருந்து தப்ப முயற்சித்தும் முடியவில்லை.

இந்த சண்டையில் ஐந்தே வினாடிகளில்  பாம்பை தன் வாயால் வசமாக பிடித்து விடுகிறது அந்த பூனை.இதை பார்ப்பதற்கு , கீரிப்பிள்ளையும் பாம்பும் சண்டையிடுவது போல உள்ளது என நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.

Advertisement