பல்கலைக்கழக தேர்வில் ஜாதி குறித்து கேள்வி கேட்கப்பட்ட விவகாரம் – ஒருவாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

308

சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் ஜாதி குறித்து கேள்வி கேட்கப்பட்ட விவகாரம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு, ஒருவாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி, சேலம் பெரியார் பல்கலைக்கழக வரலாறு பிரிவு கேள்வித்தாளில், ஜாதி குறித்த கேள்வி இடம்பெறுவதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதுகுறித்து விசாரிக்க உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். உயர்கல்வித்துறை செயலாளர் ஹென்றி தாஸ், தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவில் துணைச்செயலாளர் தனசேகர், டி.ஆர்.ஓ. விஜயலெட்சுமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார். இந்த குழுவினர் ஒருவார காலத்தில் அறிக்கையை சமர்ப்பிப்பார்கள் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.