கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் கார்கள் சேதம்

177

பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால், சுவர் இடிந்து விழுந்ததில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன.

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், மெஜஸ்டிக் பகுதி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பல நான்கு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

இதற்கிடையே, பெங்களூருவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.