இருசக்கர வாகனத்தை தெரிந்தே மோதிசென்ற கார்

350
Advertisement

சமீப காலமாக நாட்டில் விபத்துகள்  அதிகரித்து வருகிறது.குறிப்பாக ஓட்டுனர்களின் அலட்சியத்தால் சாலைவிபத்துகள் நிகழ்வது தொடர்கதை ஆகிவிட்டது.

இருசக்கர வாகனம் ஓடும்போது தலைக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் என அரசு என்னதான் அறிவுறுத்தினாலும் சிலர் இதை பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை.

தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை பல விபத்துகள் உணர்த்தியுள்ளது.இந்நிலையில் , டெல்லி  அர்ஜன் கர் மெட்ரோ நிலையம் அருகில்,கார் ஒன்று இருசக்கர வாகனத்தை தெரிந்தே  மோதிவிட்டு வேகமாக சென்றுவிட்டது.

தகவின்படி,பத்து பேர் கொண்ட இளைஞர்கள் குழு இருசக்கர வாகனத்தில் தொலைதூர பயணம் மேற்கொண்டு குருகிராமிலிருந்து டெல்லி வந்துள்ளனர்.

குறிப்பட்ட இடத்தில்,சாலையில் மற்றொரு ஓட்டுநர் ஒருவர் தன் காரை நெருங்கி ஒட்டி வருவது,இடிப்பது போல் அச்சுறுத்தி,தகாதவார்த்தைகளால்  திட்டியதாக கூறப்படுகிறது.

கோபமடைந்த இளைஞர்கள் ,கார் ஓட்டுனரின் அருகே சென்று அறிவுரை கூறியுள்ளனர்.ஒருகட்டத்தில் எனக்கு பிடித்தமாதி தான் என் காரை ஓடுவேன் என்பது போல,காரின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டு இருந்த இளைஞர் ஒருவரை தெரிந்தே மோதிவிட்டு,வேகமாக காரை ஓட்டிச்சென்றார்.

கார் மோதிச்செல்லும் காட்சி தலைக்கவசத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.மேலும் கீழே விழுந்த அந்த இளைஞர்  தற்போது நன்றாக உள்ளதாகவும்,லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டது.தலைக்கவசம் அணிந்துருந்ததால் தலையில் அடி படவில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார்  கொடுக்கப்பட்டுள்ளது.மனதை பதறவைக்கும் இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.