CAPTCHA தொல்லைக்கு முடிவு கட்டிய Apple நிறுவனம்

245
Advertisement

கணினியையோ மொபைலையோ பயன்படுத்தும் போது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்த கூடிய அம்சமாக இருப்பது CAPTCHA தான்.

பயனாளர்களை human என verify செய்ய வைக்க, இணையம் படுத்தும் பாடு சொல்லி மாளாது.

இந்த தீராத தொல்லைக்கு தீர்வு கண்டுள்ளது Apple நிறுவனம்.

அண்மையில் நடந்த, வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் iOS 16 என்னும் operating சிஸ்டத்தின் மாடலை வெளியிட்டுள்ளது Apple நிறுவனம்.

Private Access Tokens என்னும் தொழில்நுட்ப அம்சத்தை உபயோகித்து முன்னேமே சேகரிக்கப்படும் விவரங்களை பயன்படுத்தி automatic verification நடப்பது சாத்தியமாவதால் CAPTCHAவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என Apple நிறுவனம் தெரிவித்துள்ளது.