நோட்டாவை விட குறைவாக வாக்கு வாங்கிய பாஜகவின் அண்ணாமலைக்கு பதில் சொல்ல முடியாது – அமைச்சர் நாசர்

354

தமிழகத்தில் நோட்டாவை விட குறைவாக வாக்கு வாங்கிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு பதில் சொல்ல முடியாது என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் அமைச்சர் நாசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி சின்னத்துடன் பால் பாக்கெட் அச்சடிக்கப்பட்டு விரைவில் ஆவினில் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்தார். தனியார் நிறுவனங்கள் பால் விலையை அரசு நெறிப்படுத்தவில்லை என்ற பால் முகவர் பொன்னுசாமியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அமைச்சர் நாசர், அவர் சங்கத் தலைவரே கிடையாது என்று தெரிவித்தார்.