கனடாவை புரட்டிப்போட்ட புயல்

256
  1. கனடாவின் கிழக்கு மாகாணங்களான ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களை நேற்று கடுமையான புயல் தாக்கியது.

இடி மின்னலுடன் பலத்த மழையும் பெய்தது.

அதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் சுமார் 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாகாணமே இருளில் மூழ்கியது.

இந்த கடும் புயலில் சிக்கி இதுவரை 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.