ஆண்கள் விந்தணுக்களை அதிகரிக்க மாத்திரை எடுக்கலாமா? மருந்துகளின் பதில்….

272
Advertisement

விந்தணு குறைபாடு விந்தணுக்கள் குறித்து ஏற்படும் நோய்கள் குறித்து வாலிபர்கள் மட்டும் இல்லாமல் நடுதர வயது ஆண்களுக்கும் பல விதமான சந்தேகங்கள் இருக்கிறது, எனவே விந்தணுக்கள் ஏன் குறைகிறது,

தற்போது அப்பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் கூறியுள்ள தகவலைத் தெரிந்துக் கொள்ளுங்கள்,

முதலில் விந்தணுக்கள் ஏன் குறைகிறது என்று தெரிந்துக் கொள்ளுங்கள், வெப்பம் அதிகரிக்கும் வகையில் ஈடுபடும் அனைத்து வேலைகளும் பாதிப்பை ஏற்படுத்தும் ஓட்டுநர்கள், சமையல் பணியாளர்கள், வெப்பத்தில் நின்று பணிபுரிபவர்கள் மிகவும் இருக்கமாக ஜீன்ஸ் அணிவது விந்தணுக்கள் உற்பத்தியைப் பாதிக்கவே செய்யும்.

மேலும் விந்தணுக்களில் நோய்க்கிருமிகள் ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது, இதுகுறித்து பரிசோதிக்க வேண்டும். நோய்க்கிருமிகள் இருந்தால் அதன் உற்பத்தி குறையலாம். ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தாலும் விந்தணுக்களின் உற்பத்தி தாமதமாகலாம். முழுமையாக விந்தணுக்களை அழிக்கக் கூடிய விஷயங்களாக வைரஸ் தொற்றுகள் இருக்கிறது பொன்னுக்கு வீங்கி, கொரோனா, சின்னம்மை, பெரியம்மை, இந்த வைரஸ் பாதிப்புகள் தீவிரமாகும் போது விந்தணுக்கள் உற்பத்தி குறைய வாய்ப்புண்டு. மரபணுக்களில் மாற்றம் இருந்தாலும் விந்தணுக்கள் குறையும்.

திருமணம் ஆகி ஒரு வருடம் வரை கருவுறாத தம்பதியர்களில் ஆண்களுக்கு இந்த விந்து பகுப்பாய்வு சோதனை அவசியம். ஆனால் விந்தணுக்கள் அதிகரிக்க மாத்திரை எடுக்கலாம் என்ற கேள்வி இருக்கிறது, டி.வி விளம்பரங்களை பார்த்தோ தனி நபர்களின் கருத்தை நம்பி மாத்திரை எடுத்துக் கொள்ளக் கூடாது, மருத்துவரின் பரிந்துரைப் படி மாத்திரைகள் எடுக்கலாம், ஏனென்றால் அவரவர் உடலுக்கு என்றது  போல் மாத்திரைகள் வேறுபடும், அதன் கூடவே குளிர்ச்சியான உணவுகளான இளநீர், செவ்வாழை போன்றவற்றைச் சாப்பிட வேண்டும்,

பொதுவாக விந்தணுக்கள் தானாக விந்துப்பையில் இருந்து வெளிவர 72 நாட்கள் ஆகும்.  ஆண்களுக்கு 80 வயது வரை விந்தணுக்கள் உற்பத்தியாகும். ஆனால் முதிர்ச்சி ஏற்படும் போது இயல்பாகவே உடல் உறுப்புகளின் செயல் திறன் குறையும், அதுபோல 40 வயதிற்கு மேல் ஆண்களுக்கு dna fragmentation அதாவது மரபணுக்களில் மாற்றம் உண்டாகும். அப்போது விந்தணுக்களின் தரமும் குறையும்.

ஆனால் இந்த பிரச்சனையை மருத்துவச் சிகிச்சை வழியாகவும் நல்ல தூக்கம், சத்துக்கள் நிறைந்த உணவுப் பழக்கம் ஆரோக்கியமான செயல்பாடுகள் வழியாகக் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்