தமிழகத்தில் பிரபலமாகும் ஒட்டகப் பால் டீ

107
Advertisement

கோவை மாவட்டத்தில் ஒட்டகப் பால் டீ பிரபலமாகி வருகிறது.

2000 ஆம் ஆண்டில் வெளியான வெற்றிக்கொடி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வடிவேல் நடித்த ஒட்டகப் பால் டீ காட்சி மிகப் பிரபலமானது. அந்த நகைச்சுவைக் காட்சிக்காகவே திரைப்படத்தை அநேகம்பேர் மீண்டும் மீண்டும் அந்தப் படத்தைப் பார்த்தனர்.

தற்போது அந்தக் காட்சி தமிழகத்தில் நிஜமாகியுள்ளது.

Advertisement

கோவை சூலூர்ப் பகுதியில் ஒட்டகப் பாலில் தேநீர் விற்கப்பட்டு வருகிறது. அத்துடன் ஒட்டகப் பாலில் தயாரிக்கப்பட்ட லசி, ஐஸ்கிரீமும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல சேலம் பகுதிகளிலும் ஒட்டகப் பால் டீ விற்கப்பட்டு வருகிறது.

கனவு நனவாகியுள்ளது என்கின்றனர் ரசிகர்கள்.