கால்டாக்ஸி ஓட்டுநர் எரித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்

186

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த கால்டாக்ஸி ஓட்டுநர் ரவி என்பவர், கடந்தவாரம் காணாமல் போனதாக அவரது மனைவி, காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

இந்த புகார் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஓட்டுநர் ரவிக்கும் அண்டை வீட்டில் இருந்த தலைமைக்காவலருக்கும் பெண் விவகாரத்தில், பிரச்சனை இருந்தது தெரியவந்தது.

ரவி காணாமல் போன நிலையில் தலைமைக்காவலரும் வீட்டிற்கு வரவில்லை என கூறப்பட்டது.

Advertisement

இந்நிலையில், செங்கல்பட்டு அருகே ஒருவரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அந்த உடல் ஓட்டுநர் ரவியின் உடல்தானா,  என்பதை கண்டுபிடிக்க டி.என்.ஏ. பரிசோதனையும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் காவலர் செந்தில்குமாரின், கள்ளக்காதலி கவிதா என்பவர் இன்று கைதுசெய்யப்பட்டார்.

செம்பியம் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் செந்தில்குமாரின் நண்பர்கள், ஓட்டுநர் ரவியை அடித்துக் கொன்றதாக கவிதா வாக்குமூலம் அளி்த்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.