கால்டாக்ஸி டிரைவர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பம்

256

சென்னை கால்டாக்ஸி டிரைவர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில், முக்கிய திருப்பமாக ஓட்டுநரின் கால் பழைய இரும்புக்கடையிலும், புதரின் அருகில் கை-யும் கண்டுபிடிக்கப்ட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணை படாளம் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

சென்னை கே.கே.நகரைச்சேர்ந்த கால்டாக்ஸி ஓட்டுநர் ரவி கடந்த 4 ஆம்தேதி காணாமல் போனதாக அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்ததுடன், நீதிமன்றத்திலும் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் படாளம் அருகே எரிந்த நிலையில் ண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அந்த உடல் காணாமல் போன ரவியின் உடல்தான் என்பது நேற்று உறுதிபடுத்தப்பட்டது.

இதையடுத்து, ரவியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த செம்பியம் காவல்நிலைய தலைமைக்காவலர் செந்தில்குமாரின் பெண்தோழி கவிதா நேற்று கைதுசெய்யப்பட்டார்.

கவிதா அளித்த வாக்குமூலத்தின்படி, செந்தில்குமாரும் அவரது நண்பர்கள் ஓட்டுநர் ரவியை துண்டு, துண்டாக வெட்டி படுகொலை செய்து எரித்து அப்புறப்படுத்தியது தெரியவந்தது.

இந்நிலையில், ரவியின் கால் பழைய இரும்புக்கடையிலும், புதர் அருகில் காலும் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணை கே.கே.நகர் காவல்நிலையத்தில் இருந்து படாளம் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.