பாக்டீரியா தொற்று காரணமாக, இங்கிலாந்து முழுவதும் கேட்பரி சாக்லேட்டுகளை திரும்ப பெறுவதாக கேட்பரி நிறுவனம் அறிவித்துள்ளது…

103
Advertisement

உலகின் மிகவும் பிரபலமான சாக்லேட்டாக கேட்பரி திகழ்கிறது. இந்த நிலையில்,

இங்கிலாந்து முழுவதும் விற்பனை நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள கேட்பரி சாக்லேட்டுகளும், விற்கப்பட்ட கேட்பரி சாக்லேட்டுகளும் திரும்ப பெறுவதாக கேட்பரி நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. லிஸ்டீரியோ தொற்று எனப்படும் உணவு மூலம் பரவும் பாக்டீரியா தொற்று அச்சத்தின் காரணமாகவே கேட்பரி சாக்லேட்டுகளை திரும்ப பெறுவதாக கேட்பரி நிறுவனம் விளக்கம ளித்துள்ளது. கர்ப்பிணி பெண்கள், 65 வயதுக்கு மேற்பட்டோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டால் மிகவும் ஆபத்து என எச்சரித்துள்ளது. உலகப்புகழ்பெற்ற கேட்பரி நிறுவனம் தங்களது 6 தயாரிப்புகளை திரும்ப பெறுவதாக அறிவித்திருப்பது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.