4 மாதங்களுக்கு பிறகு தொடங்கப்பட்ட பேருந்து சேவை

bus
Advertisement

4 மாதங்களுக்கு பிறகு கர்நாடகா – தமிழகம் இடையேயான பேருந்து சேவை தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அண்டை மாநிலங்களுக்கிடையே பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

பிறகு அளிக்கப்பட்ட தளர்வில், புதுச்சேரிக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு அளித்த கூடுதல் தளர்வுகளில், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

Advertisement

அதன்படி, கர்நாடகா – தமிழகம் இடையே 4 மாதங்களுக்கு பிறகு பொது போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது.

நள்ளிரவு முதலே, கர்நாடக மாநிலம், பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் தமிழக அரசு பேருந்துகள் இயக்கம் துவங்கியது.

அதேபோல், கர்நாடகாவில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 250 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதனால் இரு மாநிலங்களிடையே பேருந்து சேவை தொடங்கியுள்ளதால், பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.