ஆனந்தமாக சிகரெட் பிடிக்கும் மணப்பெண்

bride
Advertisement

திருமணம் முடிந்து நடைபெற்ற விருந்தில் புதுமாப்பிள்ளை அருகிலிருந்த புதுப்பெண் சிகரெட் பிடித்து புகையை ஊதித்தள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.

திருமணம் முடிந்ததும் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் விருந்துச் சாப்பாட்டை சாப்பிடச் சென்றுவிட புது மணத்தம்பதி இருவரும் திருமண உடையில் தனித்தனி நாற்காலியில் அமர்ந்திருக்கின்றனர்.

அப்போது புது மாப்பிள்ளை வாயில் ஏதோ மென்றுகொண்டிருக்க, புதுப்பெண் தனது இடது கையில் பற்ற வைத்த சிகரெட் ஒன்றை புகைத்து புகையை ஆனந்தமாக மூன்று முறை வெளியிடுகிறார்.

ஒவ்வொரு முறை புகையை வெளியே விடும்போதும் அவரது முகத்தில் புன்னகை ததும்புகிறது. ரயில் எஞ்சினிலிருந்து வெளிவருவதுபோல புகையை வெளியிடுகிறார்.

Advertisement

அதேசமயம் அவளது கணவன் நாகரிகமாக தன் இடது கையால் தன் புது மனைவியின் செயலை செல்லமாகத் தடுக்கிறார். வட இந்தியத் தம்பதிபோல் உள்ளனர் இவர்கள்.

இந்த வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கும் இவளைப்போல் மனைவி அமைந்தால் என்ன செய்வது என நகைச்சுவைப் பதிவிட்டுள்ளனர்.

ஆனால், மணப்பெண் ஊதிய புகை சிகரெட்டிலிருந்து வருவதல்ல எனவும், ஸ்மோக்கிங் பிஸ்கட் எனவும் விவரம் அறிந்த நெட்டிசன்கள் கூறியுள்ளனர். எப்படியோ திருமணம் களைகட்டி மணமக்களை மட்டுமன்றி, அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.