திருமணத்தில் நன்றாக தூங்கிய மணமகள்

85
Advertisement

இந்திய திருமணங்கள் மிகவும் உணர்ச்சிபூர்வமானவை அத்துடன் வேடிக்கையானவை கூட.தங்கள் வாழ்க்கையை தொடங்கும் மணமக்கள் மகிழ்ச்சியுடன் திருமண நாளில் காணப்படுவர்.ஆட்டம் பாட்டம் என உற்சாகத்தில் இருப்பார்கள்.

அவர்கள் செய்யும் அல்லது அவர்களை வைத்து செய்யும் சேட்டைகள் ரசிக்கும்படி இருக்கும்.சமீப காலமாக திருமணத்தில் நிகழும் வேடிக்கையான சம்பவங்கள் இணையத்தில் உலாவருகிறது.ஒரு சில நேரங்களில் சேட்டைகள் ஒரு கட்டத்தை கடந்து , திருமணமே பாத்தில் நின்ற சம்பவங்களும் நடந்தயுள்ளது.

தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், பஞ்சாபி திருமணத்தில் நிகழ்ந்த ஒரு ரசிக்கும்படியான தருணம் தான் இணையத்தில் பலரையும் ரசிக்க வைத்துள்ளது.

Advertisement

பொதுவாக பஞ்சாபி திருமண சம்மர்தாயம்   படி, மணமக்கள் மாலை மாற்றுக்கொள்ளும் தருணம் முடிந்த பின், மற்ற சில சடங்குகளை செய்யவேண்டும்.இந்நிலையில் திருமண ஒன்றில் , அதன்படி ஒரு சில சடங்கு முடிந்து விட்டது, மணமகனுக்கு ஒருசில சடங்கு உள்ளது அதற்காக மணமகன் அழைத்து செல்லப்பட்டார்,

இதற்கிடையில்,வெகு நேரம் காத்துகொண்டு இருந்த மணமகள் ,அலுப்பில் உட்கார்ந்த இடத்திலேயே தூங்கிவிட்டார்.திருமண நாளில் மணமகள் இப்படி தூங்கிவிடுவது இது முதல் முறை அல்ல.இது போன்று பல திருமணங்களில் நிகழ்ந்துள்ளது.

பல்வேறு திருமண சடங்குகளால் சரியான தூக்கம் இல்லாமல் மணமக்கள் திருமணத்தில் சோர்வாக காணப்படுவது வழக்கம் தான்.இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.