காலை திருமணம் -இரவு  பணம், நகைகளுடன் மாயமான “மணமகள்”

57
Advertisement

திரைப்படப்பாணியில் திருமணம் முடிந்து இரவோடு இரவாக  நகைகளுடன் மணமகன்  காணாமல் போன சம்பவம் நிகழ்துருப்பதை பார்த்துருப்போம்.ஆனால் இங்கோ காணாமல் போனது மணமகன்  அல்ல மணமகள்.

ஆம், காலை திருமணம் முடிந்து இரவு மணமகள் பணம் , நகைகளுடன் மாயமான சம்பவம் உத்தரகாண்டில் நடந்துள்ளது.உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் வசிப்பவர் ஆகாஷ் குமார் ,சமீபத்தில் அப்பகுதிக்கு குடிவந்தவர்   பிங்கி.

Advertisement

நாட்கள் செல்ல, பிக்கி மற்றும் அவரின் சகோதரி , அவரின் கணவர் ஆகாஷ் குடும்பத்துடன் நெருக்கமானார்கள்.ஒருகட்டத்தில், பிங்கி மற்றும் ஆகாஷ் இருவரும் காதலிக்க ,இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திட்டமிட்டபடி திருமணம் சிறப்பாக நிறைவடைந்தது.அன்று இரவு புதுமண தம்பதி அவர்களின் அறையில் உறங்கி உள்ளனர்.காலை ஆகாஷ் குடும்பத்தினர் எழுந்தபோது தான் அதிர்ச்சி காத்திருந்தது.காலை மணமகன் குடும்பத்தினர் எழுந்திருக்க வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் எதும் இல்லை.

மணமகன் அறையில் பார்த்தபோது மணமகள் பிங்கியையும் காணவில்லை.ஆகமொத்தத்தில் வீட்டில் இருந்த அணைத்து நகைகள் மற்றும் பணத்தை பிங்கி சுருட்டிக்கொண்டு மாயமாகிவிட்டார் என்பதை பிங்கியின் வீட்டை சென்று  பார்த்தபோது தான் தெரியவந்தது, அங்கும் யாரும் இல்லை.இதுகுறித்து காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவருகிறது.