எட்டு மனைவிகள் போதாது, மேலும் 2 பெண்களை திருமணம் செய்யும் பிரபலம் !

156
Advertisement

பிரேசில் நாட்டின் மாடல் இளைஞர் ஆர்த்துர் உர்சோ என்பவருக்கு 9 மனைவிகள் உள்ளனர். இவர் தனது ஒன்பது மனைவிகளுடனும் சந்தோசமாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு மனைவி விவாகரத்து பெற இருப்பதாக அறிவித்தார்.

இது குறித்து அந்த பெண் கூறுகையில் ,

தான் மற்ற மனைவிகளுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றும் தனது கணவர் என்னிடம் மட்டும் வாழ வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.

Advertisement

இந்த நிலையில் தனது 9 மனைவிகளின் ஒருவர் விவாகரத்து செய்தது குறித்து கருத்து தெரிவித்த ஆர்தர்  உர்சோ,  ‘இது கொஞ்சமும் நியாயம் இல்லை என்றும் அவரது முடிவு எனக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது என்றும் கூறினார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த  போட்டியில் , தனக்கு எப்போதும் 10 மனைவிகள் இருக்க வேண்டும் என்பது தனது கனவு என்றும் அதனால் விரைவில் மேலும் 2 திருமணங்கள்  செய்வேன்.

எனக்கு ஒரு கனவு இருக்கிறது, எனக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே இருக்கிறாள், ஆனால் என் ஒவ்வொரு மனைவியுடனும் ஒவ்வொரு குழந்தை வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரிடமும் நான் உணரும் அன்பு ஒன்றுதான். என்று தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த முடிவு தற்போது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.