காணாமல் போன சிறுவனை 5 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார்

whatsapp
Advertisement

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் ராம்.

இவருடைய ஓரே மகனான அங்குஸ் குமார், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

வெகுநேரம் ஆகியும் சிறுவன் வீட்டிற்கு வராத நிலையில், அக்கம் பக்கத்தில் தேடிய பெற்றோர் சிறுவன் காணாமல் போனது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், பல்லாவரம் துணை காவல் ஆணையாளர் ஆரோக்கிய ரவீந்திரன், சிறுவன் குறித்த தகவல்களை 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஒட்டுநர்களுக்கு அனுப்பி வைத்தும், சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்.

Advertisement

வாட்ஸ்அப் தகவலினால், சுமார் 5 மணி நேரத்துக்கு பிறகு காணாமல் போன சிறுவனை பல்லாவரம் பகுதியிலிருந்து மீட்ட போலீசார், பெற்றோரிடம் ஒப்படைத்தனர். காணாமல் போன சிறுவனை, 5 மணி நேரத்தில் சமுக வலைதளங்களின் உதவியுடன் மீட்ட காவல்துறையின் துரித நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.