Olympic : குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை காலிறுதிக்கு தகுதி

761
pooja
Advertisement

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

மகளிருக்கான 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்திய வீராங்கனை பூஜா ராணி, அல்ஜீரியாவின் இச்ரக்கை எதிர்கொண்டார்.

தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பூஜா ராணி, 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

Advertisement

இதனையடுத்து வரும் 31-ம் தேதி நடைபெறும் காலிறுதிப் போட்டியில் பூஜா ராணி, சீனாவின் லீ கீனை எதிர்கொள்கிறார்.