சூடானில் 7 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இரு தரப்பும் ஒப்புதல் அளித்துள்ளது.

26
Advertisement

ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் சூடானில்  ராணுவத்துக்கும், துணை ராணுவ படையினருக்கும் இடையே உள்நாட்டுபோர் நடைபெற்று வருகிறது.

உள்நாட்டு போர் காரணமாக சூடானில் திரும்பிய திசையெங்கும் குண்டு சத்தம் கேட்டபடி உள்ளது. இந்த நிலையில், சூடானில் 7 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இரு தரப்பும் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த வாரம் வியாழனுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், மீட்பு பணிக்கு ஏதுவாக, சூடான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்புக்கு அனுமதி அளித்துள்ளது. இதன்படி மே 11 ஆம் தேதி வரை 7 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.