மீண்டும் போட்டியிடவுள்ளார் போரிஸ் ஜான்சன்

217

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து லிஸ் டிரஸ் விலகியதை அடுத்து அப்பதவிக்கு மீண்டும் போட்டியிட உள்ளதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரான அவர்  கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகாரை அடுத்து பதவி விலகினார். இதனையடுத்து, லிஸ் டிரஸ் புதிய பிரதமராக பதவி ஏற்றார். 

ஆனால் அவரும் நேற்று ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப்போவதாக போரிஸ் ஜான்சன்  கூறியுள்ளார்.  இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கும் பிரதமர் பதவிக்கான முன்வரிசைப் போட்டியில் இருப்பது  குறிப்பிடத்தக்கது.