வெடிகுண்டு தாக்குதல் – 8 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்ட நபர்

arrested
Advertisement

சத்தீஷ்கரில் C.R.P.F படை மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நக்சலைட்டு தளபதியை 8 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.

சத்தீஷ்கரில் செயல்பட்டு வந்த நக்சலைட்டு இயக்கத்தின் தளபதியான டைகர் ஹுங்கா என்பவரை சுக்மா போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து நக்சலைட்டு இயக்கத்தின் தளபதியான டைகர் ஹுங்கா என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

இதனிடையே, கைது செய்யப்பட்ட நக்சலைட்டு தளபதி, கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீசாருக்கு எதிராக நடந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புடையவன் என்றும், கிராமவாசிகளை படுகொலை செய்தும், அவர்களிடமிருந்து கொள்ளையடித்து உள்ளதாகவும் போலீசார் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement