கடலில் மூழ்கிய விசைப்படகுகள் தத்தளித்த மீனவர்கள்

58

நாகையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான விசைப்படகு கடலில் மூழ்கியதில், கடலில் தத்தளித்த மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, கரை திரும்பினர்.

அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த படகு, என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, 13 மீனவர்களுடன் நடக்கடலில் நின்றுள்ளது. இதையடுத்து அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த அருண் தனக்கு சொந்தமான விசைப்படகில், வசந்தன், ராம்குமார் ஆகியோருடன் பழுதான படகில் உள்ள மீனவர்களை மீட்க சென்றுள்ளனர். அப்போது இவர்கள் சென்ற படகில் ஓட்டை ஏற்பட்டு, கடல்நீர் புகுந்துள்ளது.

சிறிது நேரத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான விசைப்படகு கடலில் மூழ்கியுள்ளது. இதையடுத்து கடலில் தத்தளித்த 3 மீனவர்களை அவ்வழியாக சென்ற மீனவர்கள் மீட்டுள்ளனர். பழுதாகி நடக்கடலில் தத்தளித்த 13 மீனவர்கள் மீட்கப்பட்டனர். இந்நிலையில் படகை இழந்து கரை திரும்பிய மீனவர்களை கண்டு, அவர்களது உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

Advertisement