மாமல்புரத்தில் நடைபெற்ற கட்சியினரின் பயிற்சிமுகாமில் பங்கேற்றபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கே.எஸ். அழகிரி, திமுக ஆட்சிக்கு எதிராக அதிமுக – பாஜக பேசுகிற காரணத்தால் அந்தக் கட்சிகள்தான் எதிர்க்கட்சி பணியை செய்வதுபோன்ற மாயத்தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றன என்றும் அது உண்மையல்ல என்றும் கூறினார்.
ஆட்சியில் நடக்கும் தவறுகளை காங்கிரசும் சுட்டிக்காட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி நடத்தும் விதத்தை சொல்லித்தருகிற நண்பர்களாக இருக்கும் அதே நேரத்தில் சங்கடங்களையும் சுட்டிக்காட்டுவோம் என்றும் அழகிரி கூறியிருக்கிறார்.
எதிர்க்கட்சி அந்தஸ்துக்கான போட்டி வரிசையில் அதிமுக,பாஜகவுடன் தற்போது காங்கிரசும் இணைந்திருக்கிறது.