Monday, May 12, 2025

பெண்ணின் மீது கை வைத்து சர்ச்சையில் சிக்கிய நிதிஷ் குமார்

பீகார் மாநிலம் பாட்னாவில் மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, ஒரு பெண் பயனாளிக்கு உதவி வழங்கியபோது, புகைப்படம் எடுப்பதற்காக அவரது தோளைப் பற்றி இழுத்து நிதிஷ்குமார் நிற்க வைத்தார். இந்த புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், உடல்நிலை சரியில்லாத முதலமைச்சராலும், உதவியற்ற பாஜகவாலும் பீகார் அவமானப்படுகிறது என்றும் சாடியுள்ளது.

Latest news