கணவர் வேண்டாம் தனியாகக் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆசைப்படும் பிக் பாஸ் ரச்சிதா..

73
Advertisement

மக்கள் மத்தியில் சரவணன்  மீனாட்சி  தொடர்  மிகவும் பிரபலமான  சின்னத்திரை தொடராகத் திகழ்ந்தது,  இத்தொடர் வழியாக மீனாட்சி வேடத்தில் நடித்த ரச்சிதா ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.

அதற்குப் பிறகு இவர் நடித்த சில சீரியல்கள் சரவணன் மீனாட்சி அளவிற்கு ஹீட்டாக வில்லை,  இதனால் பிக்  பாஸ்  6ம்  சீசனில்  போட்டியாளராக  கலந்துக் கொண்டர், இந்த நிகழ்ச்சி வழியாக மீண்டும் மக்களின் கவனத்தை அதிகம் கவர்ந்தார், ஆனால் பிக் பாஸுக்குப் பிறகு ரச்சிதா, எந்த  ஒரு புது  சீரியலிலும்  நடிக்காமல் இருக்கிறார்.

மேலும்  அவர்  பிக்  பாஸ்  செல்லும்  முன்பே  கணவர்  தினேஷை பிரிந்துவிட்டார், அவரை  பற்றி  ஒரு  வார்த்தை  கூட  ஷோவில்  அவர் பேசவில்லை.

இந்நிலையில்  தற்போது  தனியாக இருக்கும் பெண்களும் குழந்தையைத் தத்தெடுக்கலாம் என்கிற  நீதிமன்ற  உத்தரவை  பற்றி  இன்ஸ்டாவில் ஸ்டோரியாக பதிவிட்டு  இருக்கிறார்  ரச்சிதா.

அதில் இது போதும்  என்ற வார்த்தையை ரச்சிதா குறிப்பிட்டு  இருப்பதைப் பார்க்கும்போது, ரச்சிதா அவர்  கணவர்  தினேஷ்  உடன்  இனி  சேர  வாய்ப்பு இல்லை  என்பது  உறுதியாகி  இருக்கிறது.