Big Boss பிரபலம் சினேகன் திருமண புகைப்படங்கள் வைரல்

snegan-marriage
Advertisement

திரைப்பட பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யத்தின் மாநில இளைஞரணிச் செயலாளருமான சினேகன்  நடிகை கன்னிகா ரவியை கரம்பிடித்துள்ளார். சினேகனின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்த்  திரையுலகில் இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை சினேகன் எழுதியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதையடுத்து குக்கிராமங்களிலும் சினேகன் பிரபலமடைந்தார்.

அதன் பின்னர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியலிலும் தீவிர கவனம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் விடுதியில்  சினேகனுக்கு பிரபல நடிகை கன்னிகா ரவியுடன்  திருமணம் நடைபெற்றது.

Advertisement

கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் திரைப்பட இயக்குனர்கள்  பாரதி ராஜா, அமீர் உள்ளிட்ட திரைபிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

பாடலாசிரியர் சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில்  தற்போது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.